இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? தளபதிக்கு தங்கையாக படத்தில் நடிக்கிருக்காங்க.. அட இவர்தான்!
South Indian Actress Childhood Photo: பல பிரபல நடிகைகளில் குழந்தைப் பருவ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வைரலாகிவருவதுண்டு. இந்த சூழலில், ஒரு பேமஸ் நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த நடிகை யார் என தெரிகிறதா? இவர் தளபதி விஜய்யின் தங்கை வேடத்தில் நடித்தவர்.
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தற்போது பிரபல நடிகையாக இருந்துவருகிறார். இவர் இப்போது கோலிவுட், டோலிவுட் சினிமா துறையில் ஒரு பிரபல நாயகி. இந்த சிறுமிதான் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னி. மலையாளத் திரையுலகைச் (Malayalam Cinema) சேர்ந்த இந்த சிறுமி, மலையாள சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு, கதாநாயகியாக மாறி சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கதாநாயகியாக வரவேற்பை பெற்றிருந்தார். இவர் மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்க இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சிறந்த நடிகையாக இருந்துவரும் இவருக்கு பல ரசிகர்கள் இருந்துவருகின்றனர். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay), பவன் கல்யாண் (Pawan Kalyan), என்டிஆர் (NTR), நானி போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போதாவது இந்த நடிகை யார் என தெரிகிறதா?
மிகக் குறுகிய காலத்தில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்திருந்தாலும், இவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அவரது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் இந்த கதாநாயகி, முதல் முறையாக அம்மா வேடத்தில் தனது சிறந்த நடிப்பால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அவர் வேறு யாருமில்லை நடிகை நிவேதா தாமஸ்தான் (Nivetha Thomas).




இதையும் படிங்க: எமோஷனல் காதல் கதையில்… ரசிகர்களின் மனதை வென்றதா தனுஷின் தேரே இஷ்க் மே.. விமர்சனங்கள் இதோ!
நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
View this post on Instagram
நடிகை நிவேதா கடந்த நவம்பர் 2, 1995 அன்று கேரளாவில் உள்ள கண்ணூரில் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான உத்தரா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு, தொலைக்காட்சியில் “மை டியர் பூதம்” என்ற சீரியலில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2008ம் ஆண்டில் வெளியான தளபதி விஜய்யின் குருவி படத்தில் அவரின் தங்கை வேடத்தில் நடித்து தமிழில் நுழைந்தார். அதன் பிறகு, சசிகுமாரின் போராளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: அஞ்சான் ரீ-ரிலீஸ் வெற்றிபெற்றால்.. அஞ்சான் 2 நிச்சயம்- இயக்குநர் லிங்குசாமி பேச்சு!
மேலும் இவர் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய்யின் ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் பிறகு நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் என்ப படத்தில் நடித்திருந்தார். இதற்கு பின் இவருக்கு தமிழில் அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கில் முழு ஈடுபாட்டுடன் படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.