Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lingusamy: அஞ்சான் ரீ-ரிலீஸ் வெற்றிபெற்றால்.. அஞ்சான் 2 நிச்சயம்- இயக்குநர் லிங்குசாமி பேச்சு!

Lingusamy About Anjaan 2: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி. இவர் சூர்யா முதல் கார்த்தி வரை பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் இணைந்த பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் நாளை 2025 நவம்பர் 28ம் தேதியில் ரீ ரிலீஸ் செய்யப்படும் நிலையில், இந்த படம் குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

Lingusamy: அஞ்சான் ரீ-ரிலீஸ் வெற்றிபெற்றால்.. அஞ்சான் 2 நிச்சயம்- இயக்குநர் லிங்குசாமி  பேச்சு!
சூர்யா, சமந்தா மற்றும் லிங்குசாமிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2025 21:54 PM IST

இயக்குநர் லிங்குசாமி (Lingusamy) தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழ் மொழியில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் சண்டக்கோழி 2 (Sandakozhi 2). இந்த படத்தில் நடிகர் விஷால் (Vishal) நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை அடுத்ததாக மேலும் இவர் தெலுங்கில் தி வாரியார் என்ற படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் வேற எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் இவரின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் அஞ்சான் (Anjaan). இதில் நடிகர் சூர்யா (Suriya) கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இவருடன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வாலும் (Vidyut Jammwal) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பின் இந்த 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் ரீ-ரிலீஸ் படமானது மக்களிடையே வரவேற்கப்பட்டால், அஞ்சான் 2 திரைப்படம் உருவாகுவது உறுதி என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை மணமுடித்த நடிகை சம்யுக்தா – வைரலாகும் போட்டோஸ்

அஞ்சன திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ் சொன்ன லிங்குசாமி :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குநர் லிங்குசாமி பல்வேறு விஷயங்களை பகிர்ந்த்திருந்தார், மேலும் பேசிய அவர், “அஞ்சான் திரைப்படத்தின் மீண்டும் எடிட் செய்யப்பட்ட படம் வெளியாகி மக்களிடையே வெற்றிபெற்றால், அஞ்சான் 2 படம் உருவாகுவதற்கு வலுவான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த படத்தின் அசல் பாகத்தில் பல தவறுகள் இருக்கிறது, அது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

இதையும் படிங்க: அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

மேலும் தற்போது வெளியிடப்படும் இந்த படத்தில் ஒவ்வொரு குறையும் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இருந்தால் மெதுவான காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட நம்பிக்கையுடன் வலுவான கதையை மக்களுக்கும் சொல்லும் படமாக மீண்டும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அஞ்சான் ரீ ரிலீஸ் டிக்கெட் புக்கிங் ஓபன் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

இந்த அஞ்சான் படமானது நீக்கப்பட்ட காட்சியிகளுடன் மீண்டும் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூரி இருந்த காட்சியை படக்குழு மொத்தமாக நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 2 மணி நேரமாக இந்த படமானது உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. நாளை இப்படம் வெளியாகும் நிலையில், சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.