சூர்யாவின் 47வது படத்தின் ஷூட்டிங் பூஜை எப்போது? ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் தகவல்!
Suriya47 Shooting Pooja: நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியானது. இப்படத்தை அடுத்தாக கருப்பு மற்றும் சூர்யா46 போன்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் இதை அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்பட ஷூட்டிங் பூஜை தொடர்பான தகவல்கள் வைரலாகிவருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்க சூர்யா (Suriya) நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ரெட்ரோ (Retro). கடந்த 2025 மே மாதத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக சூர்யா, கருப்பு (Karuppu) மற்றும் சூர்யா46 (Suriya46) போன்ற திரைப்படங்ககளில் நடித்துவந்தார். இது கருப்பு பட ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது. இதை அடுத்ததாக வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 படம் உருவாகிவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படங்களை தொடர்ந்து சூர்யா மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 (Suriya47)என்ற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு ஷூட்டிங் தொடர்பான வேலை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை எப்போது தொடங்கும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. அதனபடி இப்படத்தின் ஷூட்டிங் பூஜை வரும் 2025 டிசம்பர் 8ம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. இது குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க: அஜித் குமாரின் AK64 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் ஓவர்.. ஷூட்டிங்கில் இனி தாமதமில்லை- ஆதிக் ரவிச்சந்திரன்!
கருப்பு திரைப்படம் குறித்து சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
The first roar of #Karuppu has arrived! 💥
Experience the power-packed #GodMode, a fiery blend of sound, spirit, and style. Song out now!A @SaiAbhyankkar musical.
Lyrics by @VishnuEdavan1 @Suriya_offl @trishtrashers @RJ_Balaji #Indrans… pic.twitter.com/SOTHwrviV2— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 20, 2025
சூர்யா47 திரைப்படத்தின் அப்டேட் :
சூர்யாவின் 47வது படத்தை ஜித்து மாதவன் இயக்க, சூர்யாவின் 2டி என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இயக்குனர் ஜித்துமாதவன் ஏற்கனவே ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த சூர்யா47 படத்தில் லீட் நாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளாராம். மேலும் நடிகர் ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமானது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழி படமாக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு.. 4 ஆண்டுகளைக் கடந்தது சிம்புவின் மாநாடு படம் – இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
மேலும் பல ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படம் ஒரு குற்றம் திரில்லர் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன், நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.