Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

The Family Man Season 3 Review: அமேசான் ப்ரைம் ஓடிடியில் 2019-ம் ஆண்டு முதல் தி ஃபேமிலி மேன் சீரிஸ் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி தொடர்ந்து தற்போது 3-வது சீசன் வெளியாகி உள்ளது. இந்த சீசனின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
தி ஃபேமிலி மேன் சீசன் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Nov 2025 22:09 PM IST

ஓடிடி கலாச்சாரம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து படங்கள் மட்டும் ஓடிடியில் வெளியாகாமல் இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களே ஒரிஜினல் தொடர்களை தயாரித்து வருகின்றனர். மேலும் சில தயாரிப்பு நிறுவங்கள் தொடர்ந்து புதுப் புதுப் இணையதள தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான d2r ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே. ஆகியோர் இணைந்து தயாரித்து நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள இணையதள தொடர் தி ஃபேமிலி மேன். இந்த ஃபேமிலி மேன் சீரிஸின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் தி ஃபேமிலி மேன் சீசன் 3 தொடர் கடந்த 21-ம் தேதி நவம்பர் 2025-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த இணையதள தொடர் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த இணையதள தொடரை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். மேலும் இந்த சீசனில் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஷ்மி, ஆஷ்லேஷா தாக்கூர், வேதாந்த் சின்ஹா, நீரஜ் மாதவ், சரத் ​​கேல்கர், தலிப் தஹில், சமந்தா ரூத் பிரபு, ஸ்ரேயா தன்வந்தரி, ஜெய்தீப் அஹ்லாவத், நிம்ரத் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தி ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு?

சீக்ரட் ஏஜண்டாக இருக்கும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் இந்திய நாட்டிற்காக பல நல்ல விசயங்களை செய்துள்ளார். தொடர்ந்து தனது வேலை காரணமாக குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளாத காரணத்தால் அவரது மனைவி பிரியாமணி அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்.

Also Read… விஜய் ஆண்டனி எழுதி, இசையமைத்து, பாடிய மனசு வலிக்குது பாடல் வெளியானது

இந்த நிலையில் இந்திய எல்லைகளில் அண்டை நாடுகள் ஆக்ரமிப்புகளை நடத்தி வரும் நிலையில் அதனை தடுக்க இந்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது. அந்த திட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க எதிரி நாடுகள் பல சதித் திட்டங்களை தீட்டுகிறது. இது அனைத்தையும் சீக்ரட் ஏஜண்டாக இருக்கும் மனோஜ் பாஜ்பாய் எப்படி சரி செய்கிறார் என்பதே இந்த தொடரின் கதை.

Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர் – வைரலாகும் தகவல்