பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இந்த கூடே படத்தை பார்த்து இருக்கீங்களா?
Koode Malayalam Movie OTT Update | மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன், நஸ்ரியா மற்றும் பார்வதி திருவோத்து ஆகியோர் இணைந்து நடித்து உள்ள படம் கூடே. இந்தப் படத்தின் ஓடிடி அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கூடே. சூப்பர் நேச்சுரல் சைக்காலஜி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் அஞ்சலி மேனன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் மலையாள மொழியில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமார் உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நஸீம், பார்வதி திருவோத்து, ரஞ்சித், நிலம்பூர் ஆயிஷா, மாலா பார்வதி, ரோஷன் மேத்யூ, சித்தார்த் மேனன், அதுல் குல்கர்னி, தேவன், பாலி வல்சன், சஜிதா மடத்தில், சந்தோஷ் கீழத்தூர், ஹக்கிம் ஷா, சரத் சந்திரன், தர்ஷனா ராஜேந்திரன், சிஆர் ராஜன், பசில் பவுலோஸ், அருண் சன்னி, ஷம்பு மேனன், பிரஜ்வல் பிரசாத், நந்து பொதுவால், பத்ரா சந்தீப் மற்றும் நீரஜா ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
பிரித்விராஜின் கூடே படத்தின் கதை இதுதான்:
இந்தப் படத்தில் பிரித்விராஜ் மற்றும் நஸ்ரியா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து இருந்தனர். இதில் பிறந்ததில் இருந்தே நஸ்ரியாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் பெற்றோர்களிடமும் பெரிய வசதி இல்லாததால் இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வளர்க்க முடியாத சூழலில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் பிரிதிராஜை அவரது மாமா வளர்ப்பதாக கூட்டிச் செல்கிறார். சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் இருக்க முடியாததற்கு தங்கை தான் காரணம் என்று அவர் மீது கோபமாக இருக்கிறார் பிரித்விராஜ்.
Also Read… வாலிபால் பிளேயராக பவிஷ் நாராயண்… வைரலாகும் புதுப் படத்தின் வீடியோ
இப்படி இருக்கும் சூழலில் ஒருநாள் தங்கை நஸ்ரியா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட சொந்த ஊருக்கு வருகிறார் பிரித்விராஜ். அப்படி வரும் போதுதான் தனது தங்கை எவ்வளவு பாசம் தன்மீது வைத்துள்ளார் என்பது பிரித்விராஜிற்கு தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… சொந்த ஊரில் காய்கறி வியாபாரியாக மாறிய நடிகர் விமல்



