கார்த்தி – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் கமெர்ஷியல் படம்… வைரலாகும் தகவல்
Director Sundar C Speech | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் சமீபத்தில் சர்தார் 2 பட விழாவில் கலந்துகொண்ட போது கார்த்தி உடன் உருவாக உள்ள கூட்டணி குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் சுந்தர் சி. இவர் நடிகரும் இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்படி இவர் கடந்த 1995-ம் ஆண்டு முறை மாமன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இயக்குநராக அறிமுகம் ஆன அந்த முதல் படத்தில் இருந்து தற்போது வரை இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கேங்கர்ஸ்.
இந்தப் படத்தை இயக்கியது மட்டும் இன்றி இதில் நாயகனாகவும் நடிகர் சுந்தர் சி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2025-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சுந்தர் சி தற்போது நடிகர்கள் விஷால் மற்றும் தமன்னாவை வைத்து புருஷன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




கார்த்தி – சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் கமெர்ஷியல் படம்:
இந்த நிலையில் சமீபத்தில் சர்தார் 2 பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சுந்தர் சி நடிகர் கார்த்தி உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாக தெரிவித்தது வைரலாகி வருகின்றது. அதன்படி சுந்தர் சி அந்த விழாவில் பேசியதாவது, நானும் கார்த்தி சாரும் ஒரு பிளாஸ்ட் என்டர்டெய்னருக்காக இணைந்து பணியாற்றுகிறோம். நான் கடைசியாகக் கலந்துகொண்ட ஆடியோ வெளியீட்டு விழா மெர்சல் படத்தினுடையது. அங்கே முதலமைச்சரின் ரசிகர்கள் இருந்தனர், நான் சொன்னேன், அங்கே பல வருங்கால எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர்.
நான் கார்த்தி சாரை அரசியலுக்குள் இழுக்கவில்லை. விஜய் சார் மற்றும் ரஜினி சாருக்குப் பிறகு, கார்த்தி சார் தான் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். கார்த்தி சாருடன் நான் நடிக்கும் படம், 80-களைப் போல பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர். அடுத்த ஆண்டு படம் தொடங்கும் என நம்புகிறேன் என்று சுந்தர் சி தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SundarC:
“Myself and #Karthi sir are collaborating for a Blast entertainer💣. Last Audio Launch, I have attended is for #Mersal. CM’s fans were there, I said ‘There were future many future MLA & Ministers were sitting’. I’m not pulling Karthi sir into politics😀. After #Vijay…— AmuthaBharathi (@CinemaWithAB) September 2, 2026