ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம்… முதல்வர் விஜயை சந்தித்த தந்தை சந்திரசேகர் – தாய் ஷோபா!
CM Vijays Father Meets Son: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், முதலமைச்சர் விஜய்யின் தந்தையாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சினிமாவிலிருந்து ஓவில் இருக்கும் நிலையில், இன்று (07/09/2026) தனது மகனும், தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் 80ஸ் முதல் 90ஸ் சினிமாவில் இயக்குநராக பல்வேறு படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர் (S. A. Chandrasekhar). இவரின் இயக்கத்தில் விஜயகாந்த் (Vijayakanth) முதல் சிரஞ்சீவி (Chiranjeevi) வரை பல்வேறு நட்சத்திரங்களில் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் முதல்வர் விஜய்யும் (CM Vijay) படங்களில் நடித்திருக்கிறார். தளபதி விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தையும் இவரே இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பின் விஜயகாந்துடன், விஜய் நடித்த படத்தையும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இயக்கியிருந்தார். இயக்குனராக பல்வேறு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த நிலையில், த்ற்போய்து படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கிறார். மேலும் படங்களை இயக்குவதில் முழுமையாக விலகியுள்ளார். மேலும் இவர் தற்போது தனது மனைவி மட்டும் பேத்திகளுடன் வாழ்க்கையை செலவிட்டுவருகிறார்.
இவர் முதல்வர் விஜய்யின் தந்தை என்ற நிலையில், தமிழகத்தில் இவருக்கும் மரியாதை அதிகரித்துள்ளது. அந்த விதத்தில் இன்று (07/09/2026) தமிழக முதல்வரும், தனது மகனுமான விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்தது குறித்து இயக்குநரும், முதல்வரின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம்” என அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் பலரும் இந்த பதிவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த படங்கள்:
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். முதல்வர் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு, இதை எஸ்.ஏ.சந்திரசேகர்தான இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: மணிரத்தினம் இயக்கத்தில்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் படத்தின் டைட்டில் இதுவா?
இதன் மூலமாகவே விஜய் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். மேலும் விஜயகாந்துடன் நடித்த செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜய் நடித்திருந்தார். மேலும் விஜய்யின் நடிப்பில் ரசிகன், தேவா மற்றும் ஒன்ஸ் மோர் போன்ற படங்களை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், முதல்வர் விஜயை வைத்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.