AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடிடியில் வெளியான இயக்குநர் இளனின் பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Pyaar Prema Kalyanam Movie OTT Review | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து தற்போது நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் இளன். இவர் இயக்கி நாயகனாக நடித்த பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்

ஓடிடியில் வெளியான இயக்குநர் இளனின் பியார் பிரேமா கல்யாணம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பியார் பிரேமா கல்யாணம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Sep 2026 17:15 PM IST

தமிழ் சினிமாவில் உருவாகும் படங்கள் பெரும்பாலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் அவ்வபோது சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியான படம் பியார் பிரேமா கல்யாணம். இயக்குநர் இளன் இந்தப் படத்தை எழுதி இயக்கியது மட்டும் இன்றி அவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் இளன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னதாக உருவாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படங்கள் பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகும். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் உருவான பியார் பிரேமா கல்யாணம் தற்போது நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் இளன் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சான்வி மேகனா, ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், லொள்ளு சபா மாறன், டீப்ஸ், ஏ. ராஜாமணி பாடி, மோகன பிரியா மற்றும் ஆருஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

பியார் பிரேமா கல்யாணம் படத்தின் கதை என்ன?

தந்தையின் கட்டாயத்தின் பேரில் துபாய்க்கு வேலைக்கு சென்ற இளன் அங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றிய பிறகு அவர்களே வேலையை விட்டு தூக்கும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார். தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதே இளனின் கனவு. ஆனால் அதனை ஏற்காக அவரது தந்தை இளனுக்காக பெண் பார்க்கிறார்.

அப்படி அப்பா பார்த்த பெண் தனக்கு பிடித்த பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து காஃபி ஷாப் செல்லும் இளன் நாயகி சான்வியை தவறாக தான் பார்க்க வந்த பெண் என்று நினைத்து அவரை இம்ரஸ் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவர் பெண் இல்லை என்று தெரிந்ததும் உண்மையான பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்ல பல விசயங்களை செய்கிறார்.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் யார்? வைரலாகும் வீடியோ!

அப்படி அவர் மேல் சாவ்னிஸ்ட் போல பேசும் வீடியோவை இன்ஃபிலன்ஸ்சரான நாயகி சான்வி வீடியோ எடுத்து வெளியிட அது படுவைரலாகிவிட அனைவரும் இளனை ட்ரோல் செய்கிறார்கள். இதனால் சான்வியை இளன் தேடி கண்டுபிடித்து தனது பக்கம் உள்ள உண்மையை சொல்ல அவரும் புரிந்துகொண்டு இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் கல்யாண மேடையில் இருந்து தாலி கட்டியதும் சான்வி எழுந்து ஓட அடுத்தது என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா

Follow Us