ஒரே நாளில் 4 மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்… வைரலாகும் வீடியோ
Bigg Boss South Indian Languages | இன்று செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முறையாக இந்தியாவில் இந்தி மொழியில் தான் தொடங்கினர். இந்தி மொழியில் தொடங்கி இந்த நிகழ்ச்சி சுமார் 10 ஆண்டுகளாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் பிறகே மற்ற தென்னிந்திய மொழிகளில் தொடங்க முன்வந்தனர். அதன்படி தென்னிந்திய மொழிகளில் முதலாவதாக கன்னட மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 12 சீசன்கள் முடிவடைந்து தற்போது 13-வது சீசன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்து தற்போது இன்று முதல் 10-வது சீசன் ஒளிபரப்பாக காத்திருக்கின்றது. மேலும் மலையாள மொழியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து இன்று 8-வது சீசனை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை தென்னிந்திய மொழிகளில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. ஆனால் இந்த 2026-ம் ஆண்டில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒரே நாளில் 4 மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்:
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டில் இருந்து மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அவர்களுடன் தமிழ் பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி கலந்துறையாடியுள்ளார். அதன்படி தெலுங்கு பிக்பாஸை நடிகர் நாகர்ஜுனா, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால், கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Also Read… சினிமாவில் 18 வருடங்களைக் கடந்த நடிகர் நானி – வைரலாகும் எக்ஸ் தள பதிவு
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Bigg Boss கொண்டாட்டம் ஆரம்பம்..🔥😎 | Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10… pic.twitter.com/zvBwKPnJiv
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026