அஜித் குமார் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் – நடிகர் சூரி
Actor Soori talks about Ajith Kumar | தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்திற்காக தொடர்ந்து பேட்டிகளை அளித்து வரும் நிலையில் அவர் அஜித் குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சூரி. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து விடுதலை பாகம் ஒன்று, கருடன், விடுதலை பாகம் இரண்டு மற்றும் மாமன் என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது. இதில் தமிழ் மொழியில் நடிகர் சூரி நாயகனாக நடித்து உள்ள நிலையில் வில்லனாக நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு மொழியில் சுஹாஸ் நாயகனாகவும் நடிகர் சூரி வில்லனாக நடித்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து விறுவிறுப்பாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அஜித் குமார் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் நடத்துவார்:
அதன்படி நடிகர் சூரி பேசியதாவது, அவர் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் கவனித்துக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைச் சந்தித்தால், காபி முதல் மற்ற அனைத்து விஷயங்களையும் அவரே நேரில் வந்து உபசரிப்பார். நான் ‘வேதாளம்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க அவசரமாகத் தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். அது அஜித் சாராகத்தான் இருந்தது. அவர், என்ன ஜி யார் வந்தாலும் என்ன? நீங்க வரலாம், நான் வரக்கூடாதா? என்று கேட்டார். படப்பிடிப்புத் தளத்திற்குப் புதிதாக யாராவது வந்தால், அவரே சென்று அவர்களை வரவேற்று நலம் விசாரிப்பார். எல்லாம் சௌக்கியம்தானே? ஃப்ரீயா இருந்தா காபி சாப்பிடலாமே, வர்றீங்களா? என்று கேட்பார். அத்துடன், மதிய உணவுக்காக வெளியே எங்கும் செல்லக்கூடாது. நம்முடைய கேரவனில்தான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்வார் என்று சூரி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பேட்ட படப்பிடிப்பின் போது… த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மாளவிகா மோகனன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Soori about Thala #Ajithkumar ⭐:
“He takes care of everyone with utmost respect. If you go to his shooting spot, from coffee to everything else, he personally serves you..❣️ When I was doing Vedalam, I was getting ready quickly to meet him.. Someone knocked on my door, and it…
— Laxmi Kanth (@iammoviebuff007) September 7, 2026
Also Read… Karthi: அதனால்தான் தெலுங்கு கற்றுக்கொண்டேன் – கார்த்தி சொன்ன உண்மை!