AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகாசி விபத்து எதிரொலி.. விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.. 11 பேர் அதிரடி கைது!

Sivakasi Illegal Firecracker Manufacturing 11 Arrested : சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கமலம் பட்டாசு குடோன் விபத்து உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி விபத்து எதிரொலி.. விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.. 11 பேர் அதிரடி கைது!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Jul 2026 18:09 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், செங்கமலப்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

செங்கமலப்பட்டியில் பட்டாசு குடோன் விபத்து

செங்கமலப்பட்டியில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், இன்று திடீரென பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே பட்டாசு தயாரிப்பு குடோன் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் படிக்க: சென்னையில் பெரும் அதிர்ச்சி.. 5-ஆவது மாடியில் இருந்து விழுந்த தள்ளுவண்டி.. நொடியில் பறிபோன உயிர்!

பட்டாசு விபத்தில் 4 பேர் பரிதாப பலி

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் பரிதாபமாக உயிர் இழந்தார். பெருதளவில் நிகழ்ந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். இதில், மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார். அவரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் நடவடிக்கை

இதனால், பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4- ஆக அதிகரித்தது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக நிகழ்ந்து வரும் நிலையில், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் உள்ளிட்டவற்றில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: ரூ. 50 லஞ்சம்.. தூக்கியடித்த எஸ்பி.. மயிலாடுதுறையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Follow Us