எம்.எஸ்.தோனியின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம்
MS Dhoni The Untold Story | கிரிக்கெட்டில் பிரபலமாக வலம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து முன்னதாக வெளியான படம் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்தப் படத்தை தோனியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இயக்குநர் நீரஜ் பாண்டே இந்த எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தை எழுதி இயக்கி இருந்தார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்தப் படத்தில் தோனியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கியாரா அத்வானி, திஷா பதானி, அனுபம் கெர், நீதா மொகிந்திரா, பூமிகா சாவ்லா, ஸ்வினி காரா, ராஜேஷ் சர்மா, சாந்திலால் முகர்ஜி, மிது சக்ரபர்த்தி, குமுத் மிஸ்ரா, காளி பிரசாத் முகர்ஜி, கிராந்தி பிரகாஷ் ஜா, தீபக் தத்தா, ரவீந்திர மங்கனி, ஹெர்ரி டாங்ரி, ராஜேந்திர சாவ்லா, மோனிகா முண்டு, சர்வதாமன் டி. பானர்ஜி, ரியா சர்மா, அலோக் பாண்டே, சஞ்சய் தாதிச், சந்தீப் நஹர், கிரண் மோர், அமீர் கான், ராமன் குப்தா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இன்ஸ்பையர்ட் என்டெர்டெய்ன்மெண்ட் ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்து இருந்தது.




தோனியின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸாகும் அவரது பயோகிராஃபி:
இந்தப் படம் முன்னதாக வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி 2026-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர பிரதேஸ் மற்றும் தெலுங்கானாவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… நாங்க நாலு பேரு பாடல் வீடியோவை ரிலீஸ் செய்த கருப்பு படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
On The Occasion Of Thala #MSDhoni Birthday Special 🦁 #MsDhoniTheUntoldStory Special Screenings In Ap/TG On July7th 2026 !
Release By @KedarFilms pic.twitter.com/FfhLGNxJjG
— Daya Arjun (@DayaArjun2) June 12, 2026
Also Read… Balan Movie: மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநரின் பாலன் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!