AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. அக்.3 முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும் வேளாங்கண்ணி பேராலயம்!!

Velankanni Church 24 Hours Open: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும் எனத் தஞ்சை மறைமாவட்ட உதவி ஆயர் சகாயராஜ் அறிவித்துள்ளார். தூர தேசங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. அக்.3 முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும் வேளாங்கண்ணி பேராலயம்!!
வேளாங்கண்ணி பேராலயம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Sep 2026 11:51 AM IST

நாகப்பட்டினம், செப்டம்பர் 10: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்கக்கடலோரம் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழைநாடுகளின் லூர்து நகர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. சாதி, மத, மொழி மற்றும் இன பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் மன அமைதியையும் பிணி தீர்க்கும் அருளையும் தேடி வரும் இந்த ஆன்மீக மையத்திற்குத் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலகம் முழுவதிலும் உள்ள பல வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

இதையும் படிக்க: வாஸ்து படி இதை மட்டும் செய்ங்க… அப்புறம் உங்ககிட்ட பணம் தங்குறதை நீங்களே பார்ப்பீங்க!

பேராலயம் எடுத்த வரலாற்று சிறப்பு முடிவு:

குறிப்பாகப் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டுப் பெருவிழா காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், இத்தலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக அனுபவத்தை மேலும் எளிதாக்கும் வகையிலும், அவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் பேராலய நிர்வாகம் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும்:

அதன்படி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆண்டு முழுவதும் தினமும் 24 மணி நேரமும் எந்தவித தடங்கலுமின்றி பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் என முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தஞ்சை மறைமாவட்ட உதவி ஆயர் சகாயராஜ் இந்த முக்கிய முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். வழக்கமாக இரவு நேரங்களில் பேராலய நடை சாத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பேராலயத்தின் கதவுகள் இரவிலும் திறந்தே இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது இத்தலத்தின் வரலாற்றுப் பாதையில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

பெரும் வரவேற்பை பெற்ற அறிவிப்பு:

தொலைதூர மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மூலமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் வேளாங்கண்ணி வந்து சேரும் பக்தர்கள், பேராலய நடை திறக்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இதுவரை இருந்து வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையின் மூலம், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ வந்து சேரும் பக்தர்கள் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இன்றி நேரடியாகப் பேராலயத்திற்குச் சென்று அன்னையைத் தரிசித்துத் தங்களது சிறப்புப் பிரார்த்தனைகளைச் செலுத்த முடியும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேராலய வளாகம் முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெற்றோரில் யாருக்கு முதலிடம்? – நபிகள் நாயகம் காட்டிய உன்னத பாதை!

பேராலய நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் வரவேற்பிற்குரிய அறிவிப்பு, வேளாங்கண்ணிக்கு வருகை தரும் ஆன்மீக அன்பர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us