AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மருத்துவமனையில் அனுமதி.. ஐ.சி.யூவில் சிகிச்சை..

Kolathur TVK MLA V.S. Babu Hospitalised: சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வி.எஸ். பாபுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மருத்துவமனையில் அனுமதி.. ஐ.சி.யூவில் சிகிச்சை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 Sep 2026 11:07 AM IST

செப்டம்பர் 10, 2026: சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொளத்தூர் எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி:

இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!

2026 தேர்தல் வெற்றி மூலம் கவனம் பெற்ற வி.எஸ் பாபு:

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ். பாபு போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அவர், யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார்.

மு.க. ஸ்டாலினை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் வி.எஸ். பாபு மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். வெற்றியைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலினை போன்ற செய்கையை செய்து தனது வெற்றியை பதிவு செய்த சம்பவமும் இணையத்தில் கவனம் பெற்றது.

மேலும் படிக்க: அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொடரும் அவதி.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை..

வி.எஸ். பாபு ஏற்கனவே 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் இணைந்த அவர், 2026 தேர்தலில் முதல்முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:

தற்போது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வி.எஸ். பாபுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us