Gold : ஒரே வாரத்தில் ரூ.4,000 உயர்ந்த தங்கம் விலை.. திடீர் ட்விஸ்டுக்கு காரணம் என்ன?
Gold Price Increased 4000 Rupees In Just 7 Days | ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், கடந்த 5 நாட்களாக தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
2026, ஜூன் மாதம் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை (Gold Price), ஜூலை மாதத்தில் ட்விஸ்ட் அடித்துள்ளது. அதாவது ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், கடந்த 5 நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.4,000 வரை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த திடீர் தங்கம் விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே வாரத்தில் ரூ.4,000 உயர்வை சந்தித்த தங்கம் விலை
2026, பிப்ரவரி மாதம் முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிக கடுமையான போர் நிலவி வந்தது. அதன் காரணமாக உலக நாடுகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில், ஜூன் மாதம் இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. அதாவது, ஜனவரி மாதத்தில் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு கேன்சல் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஜுலை மாதத்தில் ட்விஸ்ட் அடித்த தங்கம் விலை
ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜுலை மாதத்திலும் தங்கம் விலை சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ,4,000 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது.
தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அதாவது ஜூலை 17, 2026 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே, இன்று (ஜூலை 23, 2026) ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.400 மற்றும் சவரனுக்கு ரூ.3,200 உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : மாதம் ரூ.16,000 பென்ஷனாக பெறலாம்.. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்து புவிசார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தான் தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மேலும் உயர்வடையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.