AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேயோன் படம் எப்படிப்பட்ட கதையைக் கொண்டது – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்

Seyon Movie Director Sivakumar Murugesan: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இரண்டாவதாக இயக்க உள்ள படத்திற்கு கமிட்டானார் இயக்குநர் சிவக்குமார் முருகேசன். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இரண்டாவதாக உருவாக உள்ள சேயோன் படம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

சேயோன் படம் எப்படிப்பட்ட கதையைக் கொண்டது – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்
இயக்குநர் சிவகுமார் முருகேசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Feb 2026 18:49 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தென் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தக் லைஃப் பாட்டியைப் பற்றிய கதையாக இந்தப் படம் அமைந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் பல முக்கியமான விசயங்களை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் கூறியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக படம் வெளியாவதற்கு முன்னதாக காதலர் தினத்தன்று ஒரு வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது.

அதில் பள்ளியில் படுக்கும் ஆண் மற்றும் பெண் என இரண்டு மாணவர்கள் பஸ்ஸில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அபோது அவர்களை மிரட்டும் ராதிகா கதாப்பாத்திரம் அந்த பெண்ணிடம் பள்ளிக்கூடம் போகவே பத்து தலைமுறை ஆகியிருக்கு நீ என்ன ஆட்டக்காரி வேசம் போடுற என்று கூறிய வசனம் ஒரு வயது முதிர்ந்த பாட்டி பெண்கள் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதாக அமைந்து இருந்தது. இப்படி பல கருத்துகள் படத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவக்குமார் முருகேசன் அடுத்ததாக இயக்க உள்ள படம் சேயேன். இந்தப் படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

சேயோன் படம் எப்படிப்பட்ட கதையைக் கொண்டது:

நடிகர் சிவக்கார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்தினை கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார். சிவக்குமார் முருகேசன் படத்தை இயக்குகிறார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சேயோன் படம் விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரு கடவுள்களையும் வணங்கும் மக்களைச் சுற்றி வருகிறது. இந்தப் படம் யாருக்கும் எதிரானது அல்ல. இது எல்லா கடவுள்களையும் மதிக்கிறது, மேலும் இது ஒரு சரியான படமாக இருக்கும். இந்தப் படத்தில் அதை நீங்களே பார்ப்பீர்கள் என்று இயக்குநர் சிவக்குமார் முருகேசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மீண்டும் இயக்குநராக புது படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

இணையத்தில் வைரலாகும் சிவக்குமார் முருகேசன் பேச்சு:

Also Read… தாய் கிழவி முதல் ஆழி வரை… நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் இதோ!

Follow Us