India vs South Africa 1st Test: கடினமாக காட்சியளித்த பிட்ச்.. ஈடன் கார்டனில் கில் அதிருப்தி.. நேரில் ஆய்வு செய்த கங்குலி..!
Shubman Gill: இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு, அதன் வடிவங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி (India vs South Africa Test Series) நாளை அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தொடங்குகிறது. இதையடுத்து, இந்த தொடருக்காக இந்திய அணியின் சில வீரர்கள் பயிற்சி அமர்வின் பங்கேற்றனர். அப்போது, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) ஆடுகளத்தை பார்க்க சென்றபோது, அதன் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. ஆடுகளத்தில் பல நாட்களாக தண்ணீர் ஊற்றப்படவில்லை என்பதால், அது வறண்டதாகவும், கடினமாகவும் இருந்துள்ளது. இதையடுத்து, சுப்மன் கில் உடனடியாக ஆடுகள கண்காணிப்பாளர் சுஜன் முகர்ஜியை அழைத்து அவருடன் நீண்ட நேரம் உரையாடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி ஆடுகளத்தை கண்காணிப்பாளருடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.




என்ன நடந்தது..?
Shubman Gill raises concerns about the pitch at Eden Gardens, Sourav Ganguly visits the ground and inspects it along with curator Sujan Mukherjee.
Indian team management looked clearly unhappy after examining the pitch. Gill summoned Sujan Mukherjee for a 15-minute chat pic.twitter.com/q7mhbOndgd
— KKR Karavan (@KkrKaravan) November 13, 2025
நேற்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தை ஆய்வு செய்தனர். அப்போது, ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு, அதன் வடிவங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்தனர். ஆடுகளத்தின் நிலையை பார்த்த பிறகு, சுப்மன் கில் கியூரேட்டர் சுஜன் முகர்ஜியை அழைத்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பிட்ச்சின் நிலைமை குறித்து விவாதித்தனர். ஆடுகள முற்றிலும் வறண்டு, கடினமாகவும், புற்கள் பழுப்பு நிறமாகவும் இருந்தது. இது மட்டுமின்றி, சில பகுதிகளில் லேசான புல் திட்டுகளும் தென்பட்டன. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரமாக ஆடுகளத்தில் தண்ணீர் இல்லாமல் இருந்ததுதான்.
தென்னாப்பிரிக்க அணியும் ஈடன் கார்டனில் பயிற்சி மேற்கொண்டது. இந்த பிட்சானது சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து சவுரவ் கங்குலி ஸ்டேடியத்திற்கு வந்து பிட்சை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கியூரேட்டர் சுஜனுடன் இது குறித்து குறித்து விவாதித்தார். அதன்பிறகு, மைதான ஊழியர்கள் தண்ணீர் தெளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விளக்கமளித்த சவுரவ் கங்குலி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் உட்பட இந்திய அணி எந்த கோரிக்கைகளையும் வைக்கவில்லை என்றார்.
ALSO READ: முதல் டெஸ்டில் இருந்து ஆல்ரவுண்டர் நீக்கம்.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு! காரணம் என்ன?
இந்திய அணி சுமார் 3 முதல் 4 மணிநேரம் பயிற்சி மேற்கொண்டது. 7 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்திய அணியின் பயிற்சி அமர்வுக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பிட்ச் கியூரேட்டர் சுஜன் முகர்ஜி, “பிட்ச் நன்றாக இருக்கும். இது ஒரு நல்ல ஸ்போர்ட்டிங் விக்கெட்டாக அமையும்” என்று கூறினார்.