Nitish Kumar Reddy: முதல் டெஸ்டில் இருந்து ஆல்ரவுண்டர் நீக்கம்.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு! காரணம் என்ன?
India vs South Africa Test Series: முதல் போட்டிக்கான அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டதன் மூலம், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. காயத்திற்குப் பிறகு ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்காக (India vs South Africa Test Series) கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் தொடருக்கு பிறகு இந்தியாவிற்கு வந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு (Indian Cricket Team) எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 என 3 தொடர்களில் விளையாடும். தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தொடங்கும். தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும். இந்த போட்டி வருகின்ற 2025 நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறும். இருப்பினும், போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, பிசிசிஐ ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை வெளியிட்டுள்ளது. பிசிசிஐ இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 16 டெஸ்ட் தொடர்.. யார் அதிக ஆதிக்கம்..?




நிதிஷ்குமார் ரெட்டி நீக்கம்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டியை பிசிசிஐ விடுவித்துள்ளது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர் இன்று அதாவது 2025 நவம்பர் 13 முதல் தொடங்கும். இந்தத் தொடரில் 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியிலிருந்து நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடருக்குப் பிறகு இரண்டாவது போட்டிக்கான அணியில் நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தொடரானது வருகின்ற 2025 நவம்பர் 19ம் தேதி முடிவடையும். இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள ஒரே மைதானத்தில் நடைபெற்றன.
இந்தியா-தென்னாப்பிரிக்கா ‘ஏ’ ஒருநாள் தொடர் அட்டவணை:
- முதல் போட்டி – 2025 நவம்பர் 13, ராஜ்கோட்
- இரண்டாவது போட்டி – 2025 நவம்பர் 16, ராஜ்கோட்
- மூன்றாவது போட்டி – 2025 நவம்பர் 19, ராஜ்கோட்
துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு:
🚨 NEWS 🚨
Nitish Kumar Reddy released from India’s squad for the first Test.
Nitish will join the India A squad for the One-day series against South Africa A in Rajkot and will return to #TeamIndia squad for the second Test post the conclusion of the ‘A’ series.
Details 🔽…
— BCCI (@BCCI) November 12, 2025
இதற்கிடையில், முதல் போட்டிக்கான அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டதன் மூலம், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. காயத்திற்குப் பிறகு ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதால், நிதிஷுக்குப் பதிலாக துருவ்வுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் எப்போது? முழு விவரம் இதோ!
முதல் டெஸ்ட் போட்டிக்கான திருத்தப்பட்ட இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஸார் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.