Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA Test Series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் எப்போது? முழு விவரம் இதோ!

IND vs SA Test Series Date Time: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதான வளாகத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும்.

IND vs SA Test Series: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் எப்போது? முழு விவரம் இதோ!
இந்தியா - தென்னாப்பிரிக்காImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Nov 2025 08:33 AM IST

தென்னாப்பிரிக்க அணி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India vs South Africa Series) இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறும். அதன்படி, தென்னாப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் (Shubman Gill) தலைமை தாங்கும் நிலையில், காயத்திற்கு பிறகு துணை கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்குகிறார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்கி வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐசிசி வைத்த செக்! 2028 ஒலிம்பிக்கில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாதா..?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்:

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி தொடங்கி, 2025 நவம்பர் 26 வரை நடைபெறும். அதன்படி, முதல் போட்டி கொல்கத்தாவிலும், இரண்டாவது போட்டி குவஹாத்தியிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்கும்.
டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வருகின்ற 2025 நவம்பர் 22 முதல் 26 வரை குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியும் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கும்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் எப்போது..?


இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதான வளாகத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். அதேநேரத்தில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியும் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கும். தொடர்ந்து, இந்த தொடரின் இறுதிப் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

ALSO READ: 10 ஆண்டுகளுக்கு பிறகு! சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி? உற்சாகத்தில் ரசிகர்கள்!

டி20 தொடர்

  • முதல் டி20ஐ – 2025 டிசம்பர் 9, கட்டாக்
  • 2வது டி20ஐ – 2025 டிசம்பர் 11, நியூ சண்டிகர்
  • 3வது டி20ஐ – 2025 டிசம்பர் 14, தர்மசாலா
  • 4வது டி20ஐ – 2025 டிசம்பர் 17, லக்னோ
  • 5வது டி20ஐ – 2025 டிசம்பர் 19, அகமதாபாத்