Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA Test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!

India vs South Africa 2025: கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த இரண்டு வீரர்கள் இந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்படி, இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என். ஜெகதீசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

IND vs SA Test: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!
சுப்மன் கில் - ரிஷப் பண்ட்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Nov 2025 19:47 PM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்த கையோடு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை (Indian Cricket Team) பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது. இந்தத் தொடரானது வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி முதல் தொடர்கிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவார் என்றும், காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ரிஷப் பண்ட் காயமடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், பண்ட் இப்போது முழுமையாக உடற்தகுதியுடன் இருப்பதால் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். முந்தைய தொடரில் அணியில் இடம் பிடிக்காத ஆகாஷ் தீப்புக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு வாய்ப்பு..?


இதற்கிடையில், கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த இரண்டு வீரர்கள் இந்த அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன்படி, இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என். ஜெகதீசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காததால், தற்போது அணியில் இடம் இழந்துள்ளனர்.

ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அட்டவணை:

  • முதல் டெஸ்ட் – 2025 நவம்பர் 14-18, காலை 9:30 மணி (ஈடன் கார்டன்ஸ்)
  • 2வது டெஸ்ட் – 2025 நவம்பர் 22 முதல் 26 வரை, காலை 9:30 மணி முதல் (அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம்).

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ்.

ALSO READ: காரை கழுவும்போது காதலியின் முத்தம்.. வைரலாகும் ஹர்திக்- மஹிகா ரொமான்ஸ் வீடியோ!

இது மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், திலக் வர்மா கேப்டனாகவும், ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன் மற்றும் பிரப்சிம்ரன் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா ‘ஏ’ ஒருநாள் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி:

திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதார், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.