Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shreyas Iyer: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!

Shreyas Iyer Return: பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயரின் வயிற்றில் பலத்த அடிபட்டு, மண்ணீரல் கிழிந்து உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், உடனடியாக ஐசியுவூக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

Shreyas Iyer: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Oct 2025 16:36 PM IST

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் (IND vs AUS 3rd ODI) காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர், குறைந்தது 2 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெவ்ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas iyer) முழுமையாக குணமடைய சுமார் 8 வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், காயம் சாதாரணமாகத் தோன்றினாலும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் உடனடியாக சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் ஐயருக்கு மண்ணீரல் காயம் மற்றும் உட்புற இரத்தப்போக்கு இருப்பதாகக் கண்டறிந்தனர். இதன் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மட்டுமல்ல, வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரையும் மிஸ் செய்வார்.

மருத்துவமனையில் சிகிச்சை:

பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயரின் வயிற்றில் பலத்த அடிபட்டு, மண்ணீரல் கிழிந்து உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், உடனடியாக ஐசியுவூக்கு மாற்றப்பட்டார். அப்போதுதான், பிசிசிஐ மருத்துவக் குழு உள் இரத்தப்போக்கை கண்டறிந்தது. இதற்கு பிறகு மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் அடிப்படையில் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சீரான நிலைக்கு திரும்பி, ஐசியுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ALSO READ: ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!

இருப்பினும் பிசிசிஐ வட்டாரங்களின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஜனவரி 2026ம் ஆண்டு வரை விளையாடமாட்டார். இதனால், ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முழு தொடரிலிருந்தும் வெளியேறுவார்.

உடல்நலம் எப்படி உள்ளது..? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்


தனது உடல்நலம் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் சமூக வலைதளங்களில் கூறியதாவது, “நான் தற்போது குணமடைந்து வருகிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் குணமடைந்து வருகிறேன், எனக்கு கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும், ஆதரவையும் காண நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறை அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் எண்ணங்களில் வைத்திருந்ததற்கு நன்றி” என்றார்.

ALSO READ: கழுத்தில் அடித்த பந்து.. இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.. ரசிகர்கள் சோகம்!

பிசிசிஐ வட்டாரம் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நலம் குறித்து தெரிவிக்கையில், “ஷ்ரேயாஸின் ஐயர் உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி ஒரு முடிவு எடுக்கப்படும். இப்போதைக்கு வருகின்ற 2026 ஜனவரி மாதத்திற்குள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பார். அவர் இந்தியாவுக்கு செல்ல தகுதி பெறும் வரை சிட்னியில் தங்க வைக்கப்படுவார்” என்று தெரிவித்தது.