Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Football Match: பெங்களூருவில் பதட்டம்.. கால்பந்து ஸ்டேடியத்திற்குள் கத்தியுடன் துரத்திய கும்பல்.. நூலிழையில் தப்பித்த வீரர்..!

Bengaluru Football Match Shock Incident: காவல்துறையினரின் கூற்றுப்படி, கடந்த 2025 அக்டோபர் 26ம் தேதி கர்நாடகாவில் உள்ள உல்சூரில் ஒரு பெண்ணுக்காக உள்ளூர் கால்பந்து வீரரான சத்யாவுக்கும் மேத்யூ என்ற நபருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, இதற்கு அடுத்த நாளான 2025 அக்டோபர் 27ம் தேதி மைதானத்தில் சத்யாவும், மேத்யூவும் மீண்டும் அதே பிரச்சினைக்காக சண்டையிட்டுள்ளனர்.

Football Match: பெங்களூருவில் பதட்டம்.. கால்பந்து ஸ்டேடியத்திற்குள் கத்தியுடன் துரத்திய கும்பல்.. நூலிழையில் தப்பித்த வீரர்..!
கால்பந்து போட்டிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2025 11:45 AM IST

பெங்களூரு கால்பந்து ஸ்டேடியத்தில் (Football Match) பாதுகாப்பு இல்லாத ஒரு காரணத்தினால் மிகப்பெரிய சம்பவம் நடைபெறவிருந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பார்வையாளர் ஒருவர் ஆயுதம் ஏந்திய கும்பலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில கால்பந்து சங்கம் நடத்திய சூப்பர் டிவிஷன் லீக்கில் எஃப்சி பெங்களூரு யுனைடேட் (FC Bengaluru United) மற்றும் ஸ்போர்டிங் கிளப் பெங்களூரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. அப்போது இந்த போட்டியின்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தி மற்றும் பிற ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பார்வையாளர் ஒருவரை தாக்க துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: ICUவில் இருந்து வெளியே வந்த ஷ்ரேயாஸ் ஐயர்.. சிட்னிக்கு செல்லும் குடும்பத்தினர்..!

என்ன நடந்தது..?


தாக்குதலுக்கு உள்ளான நபர் பெயர் சத்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 6 பேர் கொண்ட கும்பல் சத்யாவை துரத்திக்கொண்டு போட்டி நடைபெற்ற மைதானத்திற்குள் ஓடியுள்ளனர். முன்னதாக, அந்த கும்பல் கத்திகள் போன்ற ஆயுதங்களையும் தங்கள் ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ள சத்யா அடித்தளத்திற்கு ஓடினார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அங்கும் அவரைப் பின்தொடர்ந்தார். இறுதியாக, KSFA அதிகாரிகள் காவல்துறைக்கு கொடுத்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் பின்வாங்கினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அருகிலுள்ள அசோக் நகர் காவல் நிலையத்திலிருந்து போலீசார் வருவதற்கு முன்பே, தாக்குதல் நடத்தியவர்கள் மைதானத்தை விட்டு ஓடியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் என்ன..?

காவல்துறையினரின் கூற்றுப்படி, கடந்த 2025 அக்டோபர் 26ம் தேதி கர்நாடகாவில் உள்ள உல்சூரில் ஒரு பெண்ணுக்காக உள்ளூர் கால்பந்து வீரரான சத்யாவுக்கும் மேத்யூ என்ற நபருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு, இதற்கு அடுத்த நாளான 2025 அக்டோபர் 27ம் தேதி மைதானத்தில் சத்யாவும், மேத்யூவும் மீண்டும் அதே பிரச்சினைக்காக சண்டையிட்டுள்ளனர். இரு தரப்பிலிருந்தும் சிலர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சத்யா அல்லது மேத்யூ இருவருக்கும் எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ALSO READ: 7 மாத கர்ப்பம்! 145 கிலோ பளு தூக்கி சாதனை.. வெண்கலம் வென்ற டெல்லி பெண் கான்ஸ்டபிள்!

மேலும், இரு தரப்பினரும் புகார் அளிக்கவில்லை என்றும், உல்சூரில் இதற்கு முன்பு ஏதேனும் புகார் பதிவு செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு அணி அதிகாரிகளும் பார்வையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்