Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ashes 2025: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் எப்போது? ஹெட் டூ ஹெட் சாதனை எப்படி?

England vs Australia Test Series: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து, 2010-11க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் ஆஷஸ் தொடரை வெல்லும் இலக்கை நோக்கிச் செல்கிறது. இதற்கிடையில், சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள ஆஸ்திரேலியா முயற்சிக்கும்.

Ashes 2025: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் எப்போது? ஹெட் டூ ஹெட் சாதனை எப்படி?
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2025 08:19 AM IST

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (England vs Australia Test Series) இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் (Ashes 2025) வருகின்ற 2025 நவம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து, 2010-11க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் ஆஷஸ் தொடரை வெல்லும் இலக்கை நோக்கிச் செல்கிறது. இதற்கிடையில், சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ள ஆஸ்திரேலியா முயற்சிக்கும். ஆனால் இந்த ஆண்டு, ஆஸ்திரேலிய அணி அவ்வளவு வலுவான நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. கேப்டன் பாட் கம்மின்ஸும் காயமடைந்துள்ளதால், முதல் போட்டியில் விளையாட மாட்டார். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஷான் அபோட் ஆகியோரும் காயங்கள் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

ALSO READ: இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்டில் சிக்கல்.. மேலும் 3 வீரர்கள் மருத்துவமனை அனுமதி..!

ஹெட் டூ ஹெட் விவரங்கள்:

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 345 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணியே முன்னிலை வகிக்கிறது. இதுவரை நடந்த 345 போட்டிகளில் ஆஸ்திரேலியா 142 போட்டிகளிலும், இங்கிலாந்து 110 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 41.15 ஆகும். ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி இதுவரை 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 56 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 90 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

ஆஷஸ் தொடரை இந்தியாவில் எங்கே பார்க்கலாம்?


ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD 1ல் காணலாம். மொபைல் மற்றும் லேப்டாப்பில் காண விரும்புவோர் இந்த தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம்.

ஆஷஸ் தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட் போட்டி – 2025 நவம்பர் 21, பெர்த் மைதானம், காலை 8 மணி
  • 2வது டெஸ்ட் போட்டி – 2025 டிசம்பர் 4, தி கப்பா ஸ்டேடியம், காலை 9.30 மணி
  • 3வது டெஸ்ட் போட்டி – 2025 டிசம்பர் 17, அடிலெய்டு ஓவல், காலை 5.30 மணி
  • 4வது டெஸ்ட் போட்டி – 2025 டிசம்பர் 26, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், காலை 5.30 மணி
  • 5வது டெஸ்ட் போட்டி – ஜனவரி 4, சிட்னி கிரிக்கெட் மைதானம், காலை 5.30 மணி

ஆஷஸ் தொடருக்கான இரு அணிகளின் விவரம்:

ஆஸ்திரேலியா (முதல் போட்டிக்கு):

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால், பியூ வெப்ஸ்டர்.

ALSO READ: கில்லின் காயம்.. குவஹாத்தி டெஸ்ட் போட்டியை மிஸ் செய்வாரா?

இங்கிலாந்து:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் டாங், மார்க் வுட்.