Test Twenty: டெஸ்ட்-ம் டி20யும் சேர்ந்த கலவை.. கிரிக்கெட்டில் வருகிறது புது வடிவம்.. ஆர்வத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!
Test Twenty Format: கிரிக்கெட்டில் ஒரு புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது டெஸ்ட் ட்வெண்டி என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது 19 வயதுக்குட்பட்ட போட்டியாக மட்டுமே விளையாடப்படும். சில விதிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், சில டி20 இலிருந்தும் எடுக்கப்பட்டவை, ஆனால் இந்த புதிய வடிவத்திற்கு ஏற்றவாறு சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் (Cricket) என்று சொன்னதும் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்பதுதான். இவை 3 மட்டுமே தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளது. இது தவிர கிரிக்கெட்டில் இன்னும் 2 வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தி ஹண்ட்ரட் லீக். இது ஒவ்வொன்றும் 100 பந்துகள் கொண்ட போட்டியாகும். இது கிட்டத்தட்ட டி20 வடிவமாகவே பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மற்றொரு வடிவம் டி10 ஆகும். இதற்கிடையில், ஒரு புதிய வடிவம் விரைவில் தொடங்கவுள்ளது. இது கிரிக்கெட்டின் அடுத்த வடிவமாக பார்க்கப்படுகிறது. இதுதான் டெஸ்ட் 20 (Test Twenty) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் போட்டியில் டி20யும் இணைகிறது. இதனை பற்றிய முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: 2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் அகமதாபாத்.. பதிவு போட்டு உறுதி செய்த அமித் ஷா!




டெஸ்ட் ட்வெண்டி:
கிரிக்கெட்டில் ஒரு புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது டெஸ்ட் ட்வெண்டி என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது 19 வயதுக்குட்பட்ட போட்டியாக மட்டுமே விளையாடப்படும். சில விதிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், சில டி20 இலிருந்தும் எடுக்கப்பட்டவை, ஆனால் இந்த புதிய வடிவத்திற்கு ஏற்றவாறு சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒரு போட்டியின் முடிவு வெற்றி, தோல்வி, டை அல்லது டிராவாக இருக்கலாம்.
ஏபி டிவில்லியர்ஸ், கிளைவ் லாயிட், மேத்யூ ஹேடன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர். இருப்பினும், இந்த வடிவம் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இந்த போட்டி சிவப்பு பந்தில் விளையாடப்படுமா அல்லது வெள்ளை பந்தில் விளையாடப்படுமா என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த போட்டி நடத்த திட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ: ரெடியா இருங்க.. டி20 உலகக்கோப்பையில் களமிறங்கும் 16 அணிகள்!
போட்டி வடிவம் எப்படி..?
🚨 A NEW CRICKET FORMAT INTRODUCED. 🚨
– ‘Test Twenty’ will be launched in January.
– It’ll be an 80 over contest combined.
– It’ll be played in 4 intervals.
– 20 overs each with both sides batting and bowling twice. pic.twitter.com/HjduXJ6U5G
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 16, 2025
டெஸ்ட் ட்வெண்டி போட்டியில் மொத்தம் 4 ப்ரேக் இருக்கும். அதன்படி, ஒரு இன்னிங்ஸூக்கு 20 ஓவர்கள் என மொத்தமாக 4 இன்னிங்ஸூக்கு 80 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும். போட்டியின்போது ஒரு அணி முதல் இன்னிங்ஸில் 75 ரன்கள் பின் தங்கியிருந்தால், அது ஃபாலோ ஆன் விளையாட வேண்டியிருக்கும். இதுகுறித்து தி ஃபோர்த் ஃபார்மேட்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஒன் ஒன் சிக்ஸ் நெட்வொர்க்கின் நிர்வாகத் தலைவருமான கௌரவ் பஹிர்வானி கூறுகையில், ”புதிய வடிவத்திற்கு டெஸ்ட் ட்வென்டி20 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய மற்றும் அற்புதமான கிரிக்கெட் வடிவத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே, ஒவ்வொரு அணிக்கும் பேட்டிங் செய்ய 2 வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், இந்த வடிவம் ஒரு டெஸ்ட் போட்டியை விடக் குறுகியதாகவும் வேகமாகவும் நடைபெறும். இது பார்வையாளர்களை தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்க விரும்ப செய்யும். இது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் இரண்டின் விதிகளையும் ஒருங்கிணைக்கிறது. சில விதிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும், சில டி20 இலிருந்தும் எடுக்கப்பட்டவை. ஆனால் இந்த புதிய வடிவத்திற்கு ஏற்றவாறு சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.