Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐபிஎல் சூதாட்டம்… தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு

MS Dhoni : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முன்னாள் காவல் அதிகாரி மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஐபிஎல் சூதாட்டம்… தோனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… தீர்ப்பு ஒத்திவைப்பு
எம்.எஸ்.தோனி
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2025 18:22 PM IST

சென்னை, அக்டோபர் 14 :  முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த  வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் வழக்கு பெயர் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கை ஏற்றால் முக்கிய வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தால் அவரது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வழக்கின் பின்னணி

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது எழுந்த சூதாட்டம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் தனியார் தொலைகாட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  இந்த சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தனது கௌரவித்தை களங்கப்படுத்துவதாக இருப்பதாகக் கூறி தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு சம்பத் குமார் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிக்க : MS Dhoni: புது ஸ்டேடியத்தில் பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தோனி.. ரசிகர்கள் செய்த ஆரவாரம்!

சம்பத் குமார் மனு

இதையடுத்து, சம்பத் குமார் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. முன்னாள் காவல் அதிகாரி சம்பத் குமாரின் இந்த மனுவை ஏற்றால் இந்த வழக்கு முடிய இன்னும் பல ஆண்டுகளாக வாய்ப்புள்ளது என்று கூறி நீதிபதி நிராகரித்தார். அதற்கு எதிராக சம்பத் குமார் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை  நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வு அக்டோபர் 14, 2025 அன்று விசாரித்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது. தீர்ப்பு எந்த தேதியில் வழங்கப்படும் என தெரிவிக்காத நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் வரை வழக்கு நிலுவையில் தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எஸ்.தோனிக்கு எதிரான முன்னாள் காவல் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் விரைவில் தீரப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.