MS Dhoni: மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தோனி.. ஐபிஎல் 2026 சீசனில் புதிய அணியில் இணைகிறாரா..?
Mumbai Indians: எம்.எஸ்.தோனி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிருந்திருந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனியை சுற்றி அடிக்கடி பல ஊகங்கள் நிகழும். இருப்பினும், தல தோனி என்ன முடிவுகளை எடுப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஐபிஎல் 2026ல் அனைத்திருக்கும் பதில் கிடைக்கும்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் சிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் விளையாடப்படும் 3 மாதங்களை தவிர, மற்ற மாதங்களில் தோனி என்ன செய்கிறார் என்பது யாருக்கு தெரியாது. பெரும்பாலான நேரங்களை தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன், தனது விவசாய நிலங்களில் விவசாயமும் செய்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி ஜெர்சியை எம்.எஸ்.தோனி அணிந்திருந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதன்மூலம், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மும்பை அணியில் இணைகிறாரா எம்.எஸ்.தோனி..?
MS Dhoni in Mumbai Indians Training Jersey.
Is Ambani Saab Cooking Something? 😭 pic.twitter.com/6TFqJAPZqw
— Selfless⁴⁵ (@SelflessCricket) October 7, 2025
ஒரு கால்பந்து போட்டியின்போது எம்.எஸ்.தோனி தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் எம்.எஸ்.தோனி மும்பை இந்தியன்ஸ் பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய வெள்ளை நிற ஜெர்சியை அணிந்திருந்தார். இது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி கிட் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதினால் இரு அணியின் ரசிகர்களும் பயங்கரமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி போன்று சண்டை போட்டு கொள்வார்கள்.




இந்தநிலையில், எம்.எஸ்.தோனி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிருந்திருந்தது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனியை சுற்றி அடிக்கடி பல ஊகங்கள் நிகழும். இருப்பினும், தல தோனி என்ன முடிவுகளை எடுப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து எம்.எஸ்.தோனி வெளியேறி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. மேலும், தோனி மும்பை இந்தியன்ஸ் அணியின் வழிகாட்டியாக போகிறாரா என்று ரசிகர் ஒருவர் கேள்வியும் எழுப்பினார்.
ALSO READ: என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிஸ் செய்தது இதைதான்.. சூர்யகுமார் யாதவ் வருத்தம்..!
தோனியின் திட்டம் என்ன..?
தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்து வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், எம்.எஸ்.தோனி ஐபிஎல்லில் இருந்து ஒரு வீரராக ஓய்வு பெற்றால், அவர் நிச்சயமாக வழிகாட்டியாக பொறுப்பேற்கலாம். இருப்பினும் எந்த அணியுடன் இணைவார் என்பது எதிர்காலத்தில் மட்டுமே தெரியும்.