டேங்கர் லாரிகளின் போராட்டத்துக்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
LPG Tanker Lorry Strike : எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கக்கோரி கடந்த 5 நாட்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைில் இந்த போராட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை, அக்டோபர் 14 : தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த அக்டோபர் 9, 2025 அன்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் 5 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து கேஸ் எடுத்து செல்லும் பணி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும், தென் மாநிலத்தை சேர்ந்த பல பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் (Gas Cylinder) விநியோகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் டேங்கர் லாரிகள் அணி வகுத்து காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் இந்த நிலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) மனு தாக்கல் செய்துள்ளன.
டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தின் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எனவே வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு அக்டோபர் 14, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரத்தலா், தற்போதைய ஒப்பந்தத்தை மார்ச் வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டேங்கர் லாரி வேலை நிறுத்ததுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை




டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு காரணம் என்ன?
எல்பிஜி எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்தது. இதனையடுத்து , பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இந்த நிலையில் டெண்டர் பணிகள் முடியும் வரை தற்போதைய ஒப்பந்தங்களை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதுவரை டேங்கர் லாரிகள் செயல்படாது என்பதால் தங்களுக்கு பெரிய இழப்பீடு ஏற்படும் எனவும், ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுகள் நீடிக்குமாறும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டது.
இந்த வேலைநிறுத்தத்தால், எல்பிஜி எரிவாயுவை சிலிண்டர் நிரப்பு ஆலைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து பணிகள் முற்றிலும் முடங்கின. இதன் விளைவாக தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது. இதனால் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கும் என கூறப்பட்டது.
இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!
இந்l நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்காலிக ஒப்பந்தத்தை 2026, மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் எல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.