Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலையிலேயே அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

Chennai Gas Cylinder Price On October 1 : சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து, ரூ.1,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலையிலேயே அதிர்ச்சி.. அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
சென்னை கேஸ் சிலிண்டர் விலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Oct 2025 07:06 AM IST

சென்னை, அக்டோபர் 01 :  சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை (Chennai Gas Cylinder Price) ரூ.16 உயர்ந்து, ரூ.1,754-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த விலை உயர்வு 2025 அக்டோபர் 1ஆம் தேதியான இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையின் நிலவரம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற காரணகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலைகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்கின்றன.  இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், 2025 அக்டோபர் 1ஆம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆறு மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில்,  2025 அக்டோபர் மாதம் உயர்ந்துள்ளது.

Also Read ; வெர்ஸ் இனோவேஷன் நிறுவனத்தின் வருவாய் 88% வளர்ச்சி – லாபம் அதிகரிப்பு

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.19 உயர்ந்து  1754 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கடந்த 2025 செப்டம்பர் மாதம் ரூ.1,738க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  தற்போது ரூ.1,75க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமின்றி ரூ.868.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உணவகங்கள், சிறிய அளவிலான உணவகங்கள் போன்றவற்றில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை நம்பி இருப்பதால், இந்த விலை உயர்வு வணிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!

 மற்ற மாநிலத்தில் சிலிண்டர் விலை எப்படி? 

மாநில வாரியாக பார்த்தால் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.1596.50, கொல்கத்தாவில் ரூ.1700.50, மும்பையில் ரூ.1,547க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.5, கொல்கத்தாவில் ரூ.879, லக்னோவில் ரூ.890.50, ஹைதராபாத்தில் ரூ.905, பாட்னாவில் ரூ.951, அகமதாபாத்தில் ரூ.860க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.