வெர்ஸ் இனோவேஷன் நிறுவனத்தின் வருவாய் 88% வளர்ச்சி – லாபம் அதிகரிப்பு
VerSe Innovation : இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டெக் நிறுவனம் வெர்ஸ் இனோவேஷன் 2025 நிதியாண்டில் வலுவான வளர்ச்சி மற்றும் நிதி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு ஒரு பகுதியாக மாறிவிட்டது. மக்கள் இதனை தங்கள் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். கடைகளில் பழங்கள் வாங்குவதற்கு கூட ஏஐ கருவிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டெக் நிறுவனம் வெர்ஸ் இனோவேஷன் (VerSe Innovation), 2025 நிதியாண்டில் வலுவான வளர்ச்சி மற்றும் நிதி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெர்ஸ் நிறுவனம் இந்த 2025 ஆம் ஆண்டு 88% வருவாய் வளர்ச்சி பெற்றதோடு, இழப்பை 20% குறைத்துள்ளது. இதனுடன், விளம்பர வருவாய் அதிகரிப்பு, புவியியல் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்பாடு ஆகியவை இணைந்து, வரவிருக்கும் 2026 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நிறுவனம் லாப நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : சிறிய கடைகள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமா? விதிகள் என்ன சொல்கிறது?




2025 நிதியாண்டில் வெர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் வெர்ஸ் இனோவேஷன் நிறுவனத்தின் வளர்ச்சி 88 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது நேர்மறையான எண்ணமாக பார்க்கப்படுகிறது. அதே போல வட்டி, வரி போன்ற செலவுகள் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் விளம்பர மற்றும் வணிக வருவாயிலும் வலுவான முன்னேற்றம் அடைந்துள்ளது. புதிய சந்தைகள் இந்த நிறுவனத்தின் கீழ் அதிகரித்துள்ளது. மேலும் ஏஐ தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்திறன் அதிகரித்துள்ளது.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு
இது குறித்து வெர்ஸ் இனோவேஷன் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவால் நிறுவனத்தில் ஏற்படும் விரிவாக்கம் லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்து செல்வதே எங்களின் குறிக்கோள் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்தை தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைத்து, பயனாளர்கள், விளம்பரதாரர்கள், முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் சமமானநன்மை வழங்கும் வகையில் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
இதையும் படிக்க : உங்கள் ITR Refund கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதா?.. அப்போ உடனே இத பண்ணுங்க!
இந்த நிலையில் வெர்ஸ் இனோவேஷன் நிறுவனத்தின் வளர்ச்சி இது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை நமக்கு தெளிவாக காட்டுகிறது. அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்து நம் வேலைகளை எளிதாக்கி வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட விஷயங்களுக்காக நாம் செலவிடும் நேரம் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு குறையும் அபாயம் ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் புதிய வாய்ப்புகளை இந்த செயற்கை நுண்றிவு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.