AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழக்ததில் மழை
Umabarkavi K
Umabarkavi K | Published: 01 Oct 2025 06:20 AM IST

சென்னை, அக்டோபர் 01 : தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, 2025 அக்டோபர் 1ஆம் தேதி இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 – ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி வாக்கில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : தடியடி நடத்தப்பட்டதா? மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது – அரசு தரப்பில் வெளியான விளக்கம்

வெளுக்கப்போகும் கனமழை


மேலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2025 அக்டோபர் 2ஆம் தேதியான நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 3ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : CM சார்.. அவங்க மேல கை வைக்காதீங்க – வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

2025 அக்டோபர் 4ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 அக்டோபர் 1ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Follow Us