Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுததவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
தமிழகத்தில் மழை
Umabarkavi K
Umabarkavi K | Published: 28 Sep 2025 06:25 AM IST

சென்னை, செப்டம்பர் 28 :  தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுததவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடநத் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.  இந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான  நேற்று முதல் நல்ல மழை பெய்த வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி,  வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 2025 செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. 2025 செப்டம்பர் 27ம் தேதியான நேற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை போல்பூர் அருகில் கடந்து, காலை 8.30 மணியளவில் தெற்கு ஒடிசாவின் உள் பகுதிகளில் நிலவியது.

Also Read : கனமழை வெளுக்கப்போகுது.. லிஸ்டில் உள்ள 4 மாவட்டங்கள்.. வானிலை மையம் அலர்ட்!

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை


இது தெற்கு ஒடிசா சத்தீஸ்கர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Also Read : 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்து எப்படி இருக்கும்?

தொடர்ந்து, சென்னையில் 2025 செப்டம்பர் 28ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.