Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை டூ தென்காசி… 2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weather : தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 26,27ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை டூ தென்காசி… 2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் முக்கிய அலர்ட்
தமிழகத்தில் மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Sep 2025 14:51 PM IST

சென்னை, செப்டம்பர் 26 : தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் (Tamil Nadu Weather Alert) தெரிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையில் பெரிய அளவில் மழை பொழிவு என்பது இல்லை.  இதற்கிடையில், 2025 அக்டோபர் மூன்றாவது  வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.  இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

வங்கக் கடலில் காற்றழுத்தம்

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியது. இது மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26-09-2025) காலை, 05,30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் 2025 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கக்கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை – பள்ளிக்கல்வித் துறை..

2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 செப்டம்பர் 26,27ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 26ஆம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 செப்டம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இறந்த 45 தெருநாய்களில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று உறுதி.. கோயம்புத்தூரில் அதிர்ச்சி!

சென்னையை பொறுத்தவரை, 2025 செப்டம்பர் 26,27ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.