Tamil Nadu Weather Update: இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா..?
Tamil Nadu Weather Forecast: 2025 அக்டோபர் 12ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) இன்று அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் (Dindigul), தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒருசில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதேநேரத்தில், புதுச்சேரியில் லேசான மழையும், காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும் பதிவாகியுள்ளது.
ALSO READ: தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!




அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:
- 2025 அக்டோபர் 12ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 2025 அக்டோபர் 13ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தேனி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- தமிழகத்தில் 2025 அக்டோபர் 14ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- தமிழ்நாட்டில் 2025 அக்டோபர் 15ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- தமிழகத்தில் 2025 அக்டோபர் 16 ம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ALSO READ: சிவகாசியில் வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. உள்ளே சிக்கிய தொழிலாளர்கள்.. நிலைமை என்ன?
- 2025 அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், அன்றைய நாளில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.