Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

Toll Gate Fare: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) முடிவால், வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணத்தைச் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
சுங்கச்சாவடி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Oct 2025 11:09 AM IST

தமிழ்நாடு, அக்டோபர் 11: தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் ஒரு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கார் தொடங்கி கனரக வாகனம் வரை ஒருமுறை சென்று வரவும்,  சென்று திரும்பவும் என கட்டணம் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இப்படியான நிலையில் சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி செல்வதை தவிர்க்க ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டு சந்தா செலுத்தி பயணிக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இதையும் படிங்க: டோல்கேட்டில் கட்ட பணம் இல்லை.. அரசு பேருந்தை சிறைபிடித்த ஊழியர்கள்.. பணம் கட்டி விடுவித்த பயணி!

இந்த நிலையில் மாற்றியமைக்கப்பட்ட பயனாளர்களின் கட்டண விகிதங்களை கருத்தில் கொண்டு தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைந்துள்ளது.

இது அக்டோபர் 1ம் தேதியிட்டு நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தது ரூ.5 முதல் அதிகப்பட்சம் ரூ.30 வரை சுங்கக்கட்டணம் குறையும். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில், பயனர் கட்டண விகிதங்களை மறுசீரமைக்க WPI இணைப்பு காரணியை 1.641 இலிருந்து 1.561 ஆக திருத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து ஒற்றை வாகன பயணங்கள் ரூ.5 வரை குறைகிறது.அதேசமயம் திரும்பும் பயணங்கள் மற்றும் பெரிய வாகனங்களுக்கு ரூ.30 வரை கட்டணம் குறைகிறது.  தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. உதாரணமாக சென்னை பைபாஸில் உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில், ஒரு கார் பயணத்திற்கான கட்டணம் ரூ.75 ஆக உள்ளது.

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சங்கச்சாவடிகளில் மாறிய கட்டணம் .. எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் திரும்பும் பயண கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.110 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏழு அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு, ஒற்றை பயண கட்டணம் ரூ.490 இல் இருந்து ரூ.475 ஆகவும், திரும்பும் பயண கட்டணம் ரூ.730 இல் இருந்து ரூ.710 ஆகவும் குறைந்துள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை 45B-யில் உள்ள பூதக்குடி மற்றும் சித்தம்பட்டி சுங்கச்சாவடிகளில், கார்களுக்கு பயனர் கட்டணம் குறைந்தது ரூ.5 குறைந்து,ஒரு பயணத்திற்கு ரூ.105 ஆகவும், பெரிய வாகனங்களுக்கு ரூ.20 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. திரும்பும் பயணங்களுக்கு, பல்வேறு வகை வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.30 வரை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.