Men’s T20 World Cup: ரெடியா இருங்க.. டி20 உலகக்கோப்பையில் களமிறங்கும் 16 அணிகள்!
2026 ஆடவர் டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம் ஜப்பானை வீழ்த்தி கடைசி அணியாக தேர்வாகியுள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இப்போட்டி தொடருக்கான 16 அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடரானது 2026 பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் கடைசி அணியாக ஜப்பானை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகம் தேர்வாகியுள்ளது. 2025, அக்டோபர் 16ம் தேதி ஓமனில் நடைபெற்ற தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஜப்பானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் யுஏஇ அணி தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள 16 அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரானது 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள்
அதன்படி இந்த தொடருக்காக, இந்தியா, இலங்கை , ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, இத்தாலி, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளது.
இதையும் படிங்க: விராட் கோலியின் லேட்டஸ்ட் போட்டோவால் சர்ச்சை ; கவலையில் ரசிகர்கள்!




தகுதிச் சுற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புடன் காத்திருந்த ஜப்பான், சமோவா மற்றும் கத்தார் ஆகிய அணிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியில் இருந்து வெளியேற்றியது அந்நாட்டு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி மிகப்பெரிய சாதனைப் படைத்தது. அந்த வகையில் 2026ம் ஆண்டு உள்நாட்டில் நடைபெறும் இந்த தொடரிலும் வெற்றி பெற்று சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் vs ஜப்பான்
இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய வந்த ஜப்பான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுதது. அந்த அணியில் ஒன்பதாவது இடத்தில் இறங்கிய வடாரு மியாச்சி மட்டுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தார். அவர் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
இதையும் படிங்க: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு! இந்திய அணி எப்போது எந்த அணியுடன் மோதுகிறது?
இதனைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களம் கண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷான் ஷராஃபு மற்றும் முகமது வசீம் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கேப்டன் முகமது வசீம் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அலிஷான் ஷராஃபு 46 ரன்கள் எடுத்தார். இவர்களின் பங்களிப்பு 12.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.