விராட் கோலியின் லேட்டஸ்ட் போட்டோவால் சர்ச்சை – கவலையில் ரசிகர்கள்!
Virat Kohli Sparks Speculation : இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி ஏற்கனவே டி20, மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இந்த நிலையில் அவரது சமீபத்திய போட்டோ சமூக வலைதலங்களில் பெரும் விவதாங்களை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) சமீபத்திய தோற்றம் தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவில் அவர் தாடி நரைத்து வெள்ளியாக இருந்தது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்தப் புகைப்படம் வைரலானதால், கோலி ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப் போகிறாரா என்ற சந்தேகங்களை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு வயது 36 என்பதால் தொடர்ந்து விளையாடுவாரா என கவலை தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலி சமீபத்தில் லண்டனில் ஷஷாங்க் படேல் என்ற நபருடன் புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப் புகைப்படத்தில், கோலியின் தாடி முற்றிலும் நரைத்து காணப்பட்டது. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதால், ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். கோலி ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப் போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் விராட் கோலி சில நிகழ்வுகளில் டை அடிக்காமல் இருந்திருக்கிறார். கடந்த ஜூலை 2023 இல் அனுஷ்கா சர்மாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கோலியின் தாடி நரைத்து காணப்பட்டது.. எம்எஸ் தோனியைப் போலவே, கோலியும் இளம் வயதிலேயே நரைத்த தாடியுடன் தைரியமாக வெளியே வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.




இதையும் படிக்க : MS Dhoni: விராட் கோலி இப்படி பட்டவர்தான்.. பொதுவெளியில் போட்டுடைத்த எம்.எஸ்.தோனி..!
வைரலாகும் விராட் கோலியின் லேட்டஸ்ட் போட்டோ
Virat Kohli with Shash Kiran in the UK. pic.twitter.com/Y9JoWrO1Gl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 8, 2025
ஓய்வு குறித்து மறைமுகமாக சொன்ன விராட் கோலி
கடந்த ஜூலை 10, 2025, யுவராஜ் சிங் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில், கோலி தனது தாடியைப் பற்றி ஒரு வேடிக்கையான கருத்தைத் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை விளக்கிய கோலி, “நான் இரண்டு நாட்களுக்கு முன்பு என் தாடிக்கு டை அடித்தேன். நான்கு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் தாடிக்கு டை அடித்தால் ஒய்வு பெறும் நேரம் வந்துவிட்டது” என்றார். இந்தக் கருத்துகளுடன், கோலியின் வெள்ளை தாடியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது, மேலும் ரசிகர்கள் அது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோஹ்லி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த ஆண்டு மே 12 , 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் கோலி மீண்டும் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, அக்டோபரில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துடன் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.