Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Saina- Parupalli Reunite: காதலே பெருந்துணை! மீண்டும் ஒன்றாக சேர்ந்த சாய்னா – பருப்பள்ளி ஜோடி!

Saina Nehwal - Parupalli Kashyap Announce Reunion: சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் ஆகியோர் 19 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாக அறிவித்த பின்னர், தற்போது தங்கள் உறவை மீண்டும் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் இதனை அறிவித்த சாய்னா, ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தூரம் இருவரின் முக்கியத்துவத்தை உணர்த்தியதாகவும், மீண்டும் ஒரு முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளனர்.

Saina- Parupalli Reunite: காதலே பெருந்துணை! மீண்டும் ஒன்றாக சேர்ந்த சாய்னா – பருப்பள்ளி ஜோடி!
சாய்னா - பருப்பள்ளிImage Source: Instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2025 08:12 AM

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவால் (Saina Nehwal), கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தநிலையில், தங்களது பிரிந்து செல்லும் முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இது இவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் (Parupalli Kashyap) தங்கள் உறவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள். இந்த தகவலை சாய்னா நேவால் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ: நைட் வாட்ச்மேனாக அரைசதம்.. புதிய வரலாறு எழுதிய ஆகாஷ் தீப்..!

19 நாட்களில் மாறிய முடிவு:

சாய்னா நேவால் தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிந்துவிட்டதாக 19 நாட்களுக்கு முன்பு அதாவது ஜூலை 13ம் தேதி இரவு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்து கொண்டதன் மூலம் பிரிவை அறிவித்திருந்தார். அந்த பதிவில், “வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்துச் செல்லும். பருபள்ளி காஷ்யப்பும் நானும் நிறைய யோசித்த பிறகு பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அமைதி, முன்னேற்றம் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம். இதுவரையிலான அனைத்து நினைவுகளுக்கும் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன், அதற்கு ஈடாக எதையும் விரும்பவில்லை. எங்களைப் புரிந்துகொண்டதற்கு நன்றி. எங்கள் தனியுரிமைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்று எழுதி இருந்தார்.

மீண்டும் இந்த பேட்மிண்டன் காதல் ஜோடி:

 

View this post on Instagram

 

A post shared by SAINA NEHWAL (@nehwalsaina)

இந்தப் பதிவுக்குப் பிறகு 19 நாட்களுக்குள் சாய்னா நேவால், பருபள்ளி காஷ்யப்புடனான தனது உறவுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளார். சாய்னா இந்தப் பதிவில் தனது கணவருடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தில், அவர்கள் மலை பகுதிகளுக்கு நடுவே நிற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

ALSO READ: கில்லுக்கு 5 முறை மிஸ்! இந்திய அணிக்கு 15 முறை.. தொடர்ச்சியாக ராசியில்லாத டாஸ்..!

இந்தப் புகைப்படத்துடன், சாய்னா நேவால் ‘சில நேரங்களில் தூரம் மக்களின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது. நாங்கள் இருவரும் இங்கே இருக்கிறோம், மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறோம்’ என்று எழுதினார். சாய்னா நேவால் இந்தப் பதிவை பருபள்ளி காஷ்யப்புடன் இணைந்து பகிர்ந்துள்ளார்.