Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

BCCI: ரோஹித் – கோலி எதிர்காலம் என்ன..? பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா பளீச் பதில்!

Virat Kohli Rohit Sharma ODI Future: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என்ற செய்திகள் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தனது மௌனத்தை கலைத்துள்ளார். அதில், ஓய்வு என்பது ஒரு வீரரின் முடிவு என்று கூறி, அனைத்து வதந்திகளையும் ராஜீவ் சுக்லா முற்றுப்புள்ளி வைத்தார்.

BCCI: ரோஹித் – கோலி எதிர்காலம் என்ன..? பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா பளீச் பதில்!
விராட் கோலி - ரோஹித் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Oct 2025 11:41 AM IST

ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலியின் (Virat Kohli) சர்வதேச போட்டிகளின் ஓய்வு பற்றிய தலைப்பு செய்திகள் மீண்டும் ஒருமுறை கவனத்திற்கு வந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என்ற செய்திகள் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தனது மௌனத்தை கலைத்துள்ளார். அதில், ஓய்வு என்பது ஒரு வீரரின் முடிவு என்று கூறி, அனைத்து வதந்திகளையும் ராஜீவ் சுக்லா முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியா vs ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 19-25 வரை நடைபெறும்.

ரோஹித் – கோலி எதிர்காலம் என்ன..?

செய்தி நிறுவனமான ANI-யிடம் பேசிய ராஜீவ் சுக்லா, “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால் ஒருநாள் அணியில் இருப்பது எங்களுக்கு நன்மை பயக்கும். அவர்கள் அணியில் இருப்பதால், ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார்.

ALSO READ: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கடைசி தொடர் குறித்த ஊகங்கள் குறித்து, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “ரோஹித் மற்றும் விராட்டுக்கான கடைசி சுற்றுப்பயணம் இது என்று அழைப்பதைப் பொறுத்தவரை, அப்படி எதுவும் இல்லை. இந்த விஷயங்களில் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வீரர்கள் மட்டுமே முடிவு செய்கிறார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை அவர்களின் கடைசி சுற்றுப்பயணம் என்று சொல்வது முற்றிலும் தவறு.” என்று தெரிவித்தார்.

இந்திய அணியையும் பாராட்டிய ராஜீவ் சுக்லா:


வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதற்காக இந்திய அணியைப் பாராட்டிய ராஜீவ் சுக்லா, “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை நான் வாழ்த்துகிறேன். ஆஸ்திரேலியா எப்போதும் கடினமான சவாலை முன்வைக்கும் என்பதால், ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமானது” என்றார்.

ALSO READ: 4 வெற்றிகளுடன் 3வது இடத்தில் இந்தியா.. ஒரு வெற்றியுடன் இலங்கை 2வது இடம்! காரணம் என்ன?

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2வது டெஸ்டின் 5வது நாளில் கே.எல். ராகுல் 58 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் முதல் தொடர் வெற்றியாகும்.