Indian Cricket Team: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு! இந்திய அணி எப்போது எந்த அணியுடன் மோதுகிறது?
Indian Cricket Team Schedule: இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இன்னும் 15 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. அதேபோல், இந்திய அணி தொடர்ச்சியாக ஒருநாள் தொடர்களிலும் விளையாடும். இந்தக் காலகட்டத்தில், இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும்.

2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள இந்திய அணி தொடர்ந்து தயாராகி வருகிறது. சமீபத்தில், இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 ஆசிய கோப்பையையும் வென்றது. இப்போது, 2026 பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, இந்திய அணி மொத்தம் 15 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடும். முக்கியமாக, இந்தியா இந்த அனைத்து போட்டிகளிலும் 3 முக்கிய அணிகளுக்கு எதிராக விளையாடும். 5 போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் (IND vs AUS) நடைபெறும். அதன் பிறகு, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். இந்தநிலையில், இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக எந்தெந்த அணிகளுடன் எப்போது மோதுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!
இந்தியா VS ஆஸ்திரேலியா
- முதல் ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 19, பெர்த் (ஆப்டஸ் ஸ்டேடியம்)
- 2வது ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 23, அடிலெய்டு (அடிலெய்டு ஓவல்)
- 3வது ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 25, சிட்னி (சிட்னி கிரிக்கெட் மைதானம்)
- முதல் டி20 – 2025 அக்டோபர் 29, கான்பெர்ரா (மனுகா ஓவல்)
- 2வது டி20 – 2025 அக்டோபர் 31, மெல்போர்ன் (எம்சிஜி)
- 3வது டி20- 2025 நவம்பர் 2, ஹோபார்ட் (நிஞ்ஜா மைதானம்)
- 4வது டி20 – 2025 நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட் (ஹெரிடேஜ் பேங்க் ஸ்டேடியம்)
- 5வது டி20 – 2025 நவம்பர் 8, பிரிஸ்பேன் (காபா)
இந்தியா VS தென்னாப்பிரிக்கா
- முதல் டெஸ்ட் – 2025 நவம்பர் 14-18, கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்)
- 2வது டெஸ்ட் – 2025 நவம்பர் 22-26, குவஹாத்தி (பர்சபரா மைதானம்)
- முதல் ஒருநாள் போட்டி – 2025 நவம்பர் 30, ராஞ்சி (JSCA கிரிக்கெட் மைதானம்)
- 2வது ஒருநாள் போட்டி – 2025 டிசம்பர் 3, நியூ ராய்ப்பூர் (ஷாஹீத் விஜய் நாராயண் சிங் மைதானம்)
- 3வது ஒருநாள் போட்டி – 2025 டிசம்பர் 6, விசாகப்பட்டினம் (ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம்)
- முதல் டி20 – 2025 டிசம்பர் 9, கட்டாக் (பரபதி ஸ்டேடியம்)
- 2வது டி20 – 2025 டிசம்பர் 11, நியூ சண்டிகர் (மொஹாலி பிசிஏ ஸ்டேடியம்)
- 3வது டி20- 2025 டிசம்பர் 14, தர்மசாலா (HPCA ஸ்டேடியம்)
- 4வது டி20- 2025 டிசம்பர் 17, லக்னோ (எகானா கிரிக்கெட் மைதானம்
- 5வது டி20- 2025 டிசம்பர் 19, அகமதாபாத் (நரேந்திர மோடி மைதானம்)
இந்தியா VS நியூசிலாந்து
- முதல் ஒருநாள் போட்டி – 2026 ஜனவரி 11, வதோதரா (BCA மைதானம்)
- 2வது ஒருநாள் போட்டி – 2026 ஜனவரி 14, ராஜ்கோட் (நிரஞ்சன் ஷா ஸ்டேடியம்)
- 3வது ஒருநாள் போட்டி – 2026 ஜனவரி 18, இந்தூர் (ஹோல்கர் கிரிக்கெட் மைதானம்)
- முதல் டி20 – 2026 ஜனவரி 21, நாக்பூர் (விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம்)
- 2வது டி20 – 2026 ஜனவரி 23, நியூ ராய்ப்பூர் (ஷாஹீத் விஜய் நாராயண் சிங் ஸ்டேடியம்)
- 3வது டி20 – 2026 ஜனவரி 25, கவுகாத்தி (பர்சபரா ஸ்டேடியம்)
- 4வது டி20ஐ – 2026 ஜனவரி 28, விசாகப்பட்டினம் (ACA-VDCA கிரிக்கெட் மைதானம்)
- 5வது டி20ப – 2026 ஜனவரி 31, திருவனந்தபுரம் (கிரீன்ஃபீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானம்)
ALSO READ: முடிவுக்கு வந்த கைகுலுக்கல் சர்ச்சை! ஹாக்கி போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் ஹை-ஃபைவ்!




2026 டி20 உலகக் கோப்பை
- பிப்ரவரி-மார்ச் 2026 (தேதி மற்றும் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்)
மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி, இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இன்னும் 15 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. அதேபோல், இந்திய அணி தொடர்ச்சியாக ஒருநாள் தொடர்களிலும் விளையாடும். இந்தக் காலகட்டத்தில், இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கும் இவை மிகவும் முக்கியமானதாக ஒருநாள் தொடராக அமையலாம்.