ICC Women World Cup 2025: இந்திய அணி டாப்! சரிந்த ஆஸ்திரேலியா.. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் நிலைமை என்ன?
ICC Women World Cup 2025 Points Table: 2025 அக்டோபர் 5ம் தேதியான் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பு, இந்திய மகளிர் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. முன்னதாக, இந்த பட்டியலில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்தது.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (ICC Women World Cup 2025) இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், 2025 அக்டோபர் 5ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (IND W – PAK W) பாகிஸ்தானை மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்கள் எடுத்தது. 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியும், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கு முன்பு, வங்கதேச மகளிர் அணி, பாகிஸ்தானை மகளிர் அணியை தோற்கடித்திருந்தது. இப்படியான சூழ்நிலையில், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
புள்ளிகள் பட்டியல்:
2025 அக்டோபர் 5ம் தேதியான் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பு, இந்திய மகளிர் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. முன்னதாக, இந்த பட்டியலில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு, இந்திய அணி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளும் தலா ஒரு இடம் சரிந்துள்ளன.




புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்:
India at the top in Points table. #ICCWomensWorldCup2025 pic.twitter.com/CevYlxapq6
— Rakesh Sharma (@iamrkRakesh) October 5, 2025
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 4 புள்ளிகள் மற்றும் +1.515 நிகர ரன் விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகளையும், டீம் இந்தியாவை விட சிறந்த நிகர ரன் விகிதத்தையும் (+1.780) கொண்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து 3வது இடத்திலும், வங்கதேசம் 4வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்தின் நிகர ரன் ரேட் (+3.773) முதல் இரண்டு அணிகளை விட சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்து தனது அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.
அதேநேரத்தில், போட்டியை நடத்தும் இலங்கை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வியடைந்து, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன்மூலம், இலங்கைக்கு ஒரு புள்ளி உள்ளது. பாகிஸ்தான் தனது முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், மிகவும் மோசமான நிகர ஓட்ட விகிதத்துடன் (-1.777) 6வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முறையே 7வது மற்றும் 8வது இடத்தில் உள்ளன.
மகளிர் உலகக் கோப்பையில் இன்று யாருக்கு போட்டி உள்ளது?
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி 2025 அக்டோபர் 6ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறும். இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்திற்கு முன்னேறுவார்கள்.