Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs AUS: மொத்தம் 8 போட்டிகள்! இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?

India Tour Of Australia 2025: இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி, ஒருநாள் தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கும்.

IND vs AUS: மொத்தம் 8 போட்டிகள்! இந்தியா – ஆஸ்திரேலிய தொடர் எப்போது..? எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Oct 2025 08:38 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் (IND vs AUS) மேற்கொள்ள இருக்கிறது. இங்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் என மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த 2 தொடர்களுக்கான அணிகளையும் இந்திய அணி (Indian Cricket Team) முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான அணிகளை அறிவித்தது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான முழு அட்டவணை மற்றும் போட்டி நேரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிகளின் முழு அட்டவணை:

இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி, ஒருநாள் தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு தொடங்கும். பின்னர் டி20ஐ தொடர் 2025 அக்டோபர் 29ம் தேதி தொடங்கி 2025 நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு தொடங்கும்.

ALSO READ: ரோஹித்- கோலிக்கு இறுதி எச்சரிக்கை.. உள்நாட்டு தொடரில் விளையாட கட்டாயப்படுத்தும் பிசிசிஐ?

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 19, பெர்த்
  • 2வது ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 23, அடிலெய்டு
  • 3வது ஒருநாள் போட்டி – 2025 அக்டோபர் 25, சிட்னி

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்

  • முதல் டி20ஐ – 2025 அக்டோபர் 29, கான்பெர்ரா
  • 2வது டி20ஐ – 2025 அக்டோபர் 31, மெல்போர்ன்
  • 3வது டி20ஐ – 2025 நவம்பர் 2, ஹோபார்ட்
  • 4வது டி20ஐ – 2025 நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட்
  • 5வது டி20ஐ – நவம்பர் 8, பிரிஸ்பேன்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி


சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரெல், பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

டி20 தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் சிங் பும்ரா , அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

ALSO READ: இந்தியாவிற்கு எதிராக வலுவான டீம்.. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி


மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் இங்கிலிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னேமன், மிட்செல் ஓவன், ஜோஷ் ஹேசில்வுட், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.