Vijay Hazare Trophy 2025: ரோஹித்- கோலிக்கு இறுதி எச்சரிக்கை.. உள்நாட்டு தொடரில் விளையாட கட்டாயப்படுத்தும் பிசிசிஐ?
Virat Kohli - Rohit Sharma: ரோஹித் சர்மா இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48 சராசரியுடன் 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11168 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், விராட் கோலி 302 போட்டிகளில் 58 சராசரியுடன், 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்களுடன் 14000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான (IND vs AUS) இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் கேப்டனாக நியமித்த பிறகு, அவர் இப்போது ஒருநாள் அணி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ரோஹித் சர்மா (Rohit Sharma) தற்போது ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், விராட் கோலியும் (Virat Kohli) நீண்ட நாட்களுக்குபிறகு ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி நிர்வாகத்தின் திட்டங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என்பதுதான் இப்போது பெரிய கேள்வியாக உள்ளது.
உள்நாட்டு தொடரில் விளையாட அழுத்தமா..?
🚨 BIG UPDATE ON KOHLI & ROHIT 🚨
The Team management is not seeing Virat Kohli and Rohit Sharma in the 2027 World Cup plans – But If both want to stay in the ODI team, they will have to play in the Vijay Hazare Trophy. (Abhishek Tripathi). pic.twitter.com/67nNAGxzsD
— Tanuj (@ImTanujSingh) August 10, 2025
எங்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தேர்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, 50 ஓவர் வடிவ போட்டியான விஜய் ஹசாரே போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார்களா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இந்த இரண்டு அனுபவமிக்க வீரர்களும் தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள விஜய் ஹசாரே போட்டியில் விளையாட வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் விளையாடினர்.




ALSO READ: கில் கேப்டன்ஷி குறித்து 12 வருடங்களுக்கு முன்பே கணிப்பு.. வைரலாகும் ரோஹித் சர்மா ட்வீட்!
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா செயல்திறன்:
ரோஹித் சர்மா இதுவரை 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48 சராசரியுடன் 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11168 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில், விராட் கோலி 302 போட்டிகளில் 58 சராசரியுடன், 51 சதங்கள் மற்றும் 74 அரைசதங்களுடன் 14000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆனால் 2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக, அவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கக்கூடியது என்னவென்றால், அவர்கள் போட்டி பயிற்சியில் குறைவாக இருக்கலாம்.
ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. பக்கா பிளான் போட்டு வெற்றி கண்ட இந்திய அணி!
இந்த 2025 அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு, இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த 2026வது வருடமும் சில போட்டிகள் இருக்கும். இடையில், இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதற்கான வாய்ப்புகல் இல்லை. இதன் காரணமாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மேலும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தினார். அதன்படி, மற்ற வடிவங்களில் விளையாடவில்லை என்றால், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டியிருக்கும்.