Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs WI: அசத்தலான பந்து வீச்சு.. சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

India vs West Indies 1st Test: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் விளையாடி இந்திய அணி கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் ஆகியோரின் அசத்தலான சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

IND vs WI: அசத்தலான பந்து வீச்சு.. சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Oct 2025 14:25 PM IST

குஜராத், அக்டோபர் 4: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்த பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் (IND vs WI) மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), துருவ் ஜூரல் ஆகியோரின் அசத்தலான சதத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் பின்னர் 286 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சாதகமாக திரும்பியது. 45.1 ஓவர்கள் கூட தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்றைய நாளுடன் சேர்த்து 3 நாட்கள் கைகளில் வைத்திருந்த நிலையிலும், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாமலே இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

பந்துவீச்சில் கலக்கிய இந்திய அணி:


முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக ரன் எடுக்க ஆரம்பம் முதலே விடவில்லை. இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் எந்த பேட்ஸ்மேனும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைசதம் அடிக்க முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்ச விக்கெட்கள் எடுத்தவராக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்டார். முதலில் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்தார். பின்னர் 2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விரைவாக தோற்கடிக்க நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.