WTC Points Table: 4 வெற்றிகளுடன் 3வது இடத்தில் இந்தியா.. ஒரு வெற்றியுடன் இலங்கை 2வது இடம்! காரணம் என்ன?
World Test Championship 2025-2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை 2வது இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் (IND vs WI) சொந்த மண்ணில் வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் வெற்றி இதுவாகும். இந்த சுழற்சியில் இந்தியா ஏழு போட்டிகளில் விளையாடி, அதில் 4 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியையும் ஒரு போட்டியை டிராவும் பெற்றுள்ளது. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) புள்ளிகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஒரு வெற்றியுடன் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
ALSO READ: ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு மறுப்பு.. தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பிய முகமது ஷமி!
3வது இடத்தில் இந்திய அணி ஏன்..?
டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி புதிய சாதனை படைத்தது. ஒரே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாத சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு வேறு எந்த நாடும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. இந்த வெற்றிக்குப் பிறகும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற ஆஸ்திரேலிய அணி ஏன் முதலிடத்தில் உள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை எவ்வாறு கணக்கிடப்படுகிறது, புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன, மற்றும் அணிகளின் நிலைகளை எது தீர்மானிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.




உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை 2வது இடத்தில் உள்ளது. இந்தியா 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு டிரா மற்றும் இரண்டில் தோல்வியடைந்துள்ளது. இலங்கைக்கு 16 புள்ளிகள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் இந்தியா 52 புள்ளிகளை பெற்றிருந்தாலும் போட்டிகள் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இலங்கையை விட இந்திய அணி பின்தங்கியுள்ளது.
ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு! இந்திய அணி எப்போது எந்த அணியுடன் மோதுகிறது?
WTC புள்ளிகள் அட்டவணையில் அணிகளின் நிலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு அணிக்கு 12 புள்ளிகள் கிடைக்கும். அதேநேரத்தில், போட்டி விளையாடப்படாமல் டையில் முடிந்தால் 6 புள்ளிகள் கிடைக்கும். ஒரு போட்டி டிராவில் முடிந்தால் 4 புள்ளிகள் கிடைக்கும். இருப்பினும், அணியின் நிலைகள் புள்ளிகளால் அல்ல, வெற்றி சதவீதத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 100 ஆகும். இலங்கை ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 66. 67 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் வெற்றி சதவீதம் 61.90 மட்டுமே ஆகும்.