Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!

Asian Cricket Council: இந்திய அணி கோப்பையை வென்றபோதும் கோப்பையை வெல்லாததால் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி அதை தன்னுடன் எடுத்துச் சென்றார். அன்றிலிருந்து அந்தக் கோப்பை ஏசிசி அலுவலகத்தில் உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் காரணமாக பதட்டங்கள் அதிகரித்தது.

Asia Cup 2025: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!
2025 ஆசியக் கோப்பைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Oct 2025 23:02 PM IST

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இருப்பினும், ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது. இதையடுத்து, 2925 ஆசிய கோப்பை கையோடு எடுத்து சென்ற மொஹ்சின் நக்வி, துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைமையகத்தில் பூட்டி வைத்தார். இந்தநிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி, தனது ஒப்புதல் இல்லாமல் அதை இந்தியாவிடம் கோப்பை மாற்றவோ அல்லது ஒப்படைக்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ: குறைந்த வயதில் 7வது சதம்.. அதிவேக 3000 ரன்கள்! வெஸ்ட் இண்டீஸ் எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்!

இந்திய அணி கோப்பையை வென்றபோதும் கோப்பையை வெல்லாததால் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி அதை தன்னுடன் எடுத்துச் சென்றார். அன்றிலிருந்து அந்தக் கோப்பை ஏசிசி அலுவலகத்தில் உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் காரணமாக பதட்டங்கள் அதிகரித்தது. இதனால், 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளிலும் இறுதிப்போட்டியையும் சேர்த்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கி கொள்ளவில்லை. இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோப்பை எங்கு உள்ளது..?


2025 ஆசியக் கோப்பை துபாயில் உள்ள ACC அலுவலகத்தில் இருப்பதாகவும், தனது ஒப்புதல் மற்றும் தனிப்பட்ட இருப்பு இல்லாமல் அதை யாரிடமும் ஒப்படைக்கக்கூடாது என்று நக்வி தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்ற கூறப்படுகிறது.  மேலும், இந்திய அணியிடமோ அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோப்பையை  தான் மட்டுமே தனிப்பட்ட முறையில் வழங்குவேன் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம்:

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான பதட்டங்கள் காரணமாக ஆசியக் கோப்பையில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுமா என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக போட்டி முழுவதும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. மேலும், மொஹ்சின் நக்வி இணையத்தில் இதுதொடர்பாக பெரிய அறிக்கையையும் வெளியிட்டார்.

ALSO READ: முதல் நாளில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம்.. 150 ரன்களை கடந்து களத்தில் ஜெய்ஸ்வால்!

ஆசிய கோப்பையுடன் மொஹ்சின் நக்வி வெளியேறியதற்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன், வருகின்ற 2025 நவம்பர் மாதம் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பவும் முடிவு செய்தது. அந்த கூட்டத்தில் மொஹ்சின் நக்வியைக் கண்டித்து, ஐசிசி இயக்குநர் பதவியில் இருந்து அவரை நீக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற ஊகம் பரவலாக உள்ளது.