Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs WI 2nd Test: முதல் நாளில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம்.. 150 ரன்களை கடந்து களத்தில் ஜெய்ஸ்வால்!

IND vs WI 2nd Test Day 1 Highlights: யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 48வது டெஸ்ட் இன்னிங்ஸில் 5வது முறையாக 150 ரன்களைக் கடந்துள்ளார். நாளைய அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது நாளில் இரட்டை சதம் அடிக்க முடிந்தால், அது அவரது ரெட்-பால் வாழ்க்கையில் மூன்றாவது இரட்டை சதமாக அமையும்.

IND vs WI 2nd Test: முதல் நாளில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம்.. 150 ரன்களை கடந்து களத்தில் ஜெய்ஸ்வால்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் - சுப்மன் கில்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Oct 2025 18:43 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் (IND vs WI) அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று இந்திய அணி (Indian Cricket Team) முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் 23 வயதே ஆன இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 5வது முறையாக 150 ரன்களைக் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) 20 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ALSO READ: கிரிக்கெட்டில் அழுத்தத்தின் கீழ் ஓய்வு? உண்மையை உடைத்த அஸ்வின்!

கலக்கிய ஜெய்ஸ்வால் – சுதர்சன் ஜோடி:


அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய கே.எல். ராகுல், 2வது டெஸ்டில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்களை சோர்வடையச் செய்து, 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது சாய் சுதர்சன் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் வாழ்க்கையில் அவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.

சாய் சுதர்சன் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 251 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஜோமல் வாரிக்கனின் அசாத்திய பந்துவீச்சில் சாய் சுதர்ஷன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர்  67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் நாளை முடித்தனர்.

ALSO READ: குறைந்த வயதில் 7வது சதம்.. அதிவேக 3000 ரன்கள்! வெஸ்ட் இண்டீஸ் எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்!

ஜெய்ஸ்வாலின் மகத்தான சாதனை:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 48வது டெஸ்ட் இன்னிங்ஸில் 5வது முறையாக 150 ரன்களைக் கடந்துள்ளார். நாளைய அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது நாளில் இரட்டை சதம் அடிக்க முடிந்தால், அது அவரது ரெட்-பால் வாழ்க்கையில் மூன்றாவது இரட்டை சதமாக அமையும். அதேநேரத்தில், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஜெய்ஸ்வால் 150 ரன்களை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2024ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்டின் முதல் நாளில் அவர் 179 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜோமல் வாரிக்கன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.