Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2030 Commonwealth Games: 2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் அகமதாபாத்.. பதிவு போட்டு உறுதி செய்த அமித் ஷா!

Commonwealth Games 2030 in Ahmedabad: 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான முன்மொழியப்பட்ட ஹோஸ்ட் நகரமாக இந்தியாவின் அகமதாபாத்தை பரிந்துரைப்பதாக காவன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அகமதாபாத் இப்போது முழு காமன்வெல்த் விளையாட்டு உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030 Commonwealth Games: 2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் அகமதாபாத்.. பதிவு போட்டு உறுதி செய்த அமித் ஷா!
2030 காமன்வெல்த் போட்டிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Oct 2025 21:30 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை (2030 Commonwealth Games) நடத்தும் உரிமையை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது. இதை தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) பிரதமர் மோடியை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு புதுடெல்லியில் இந்தியா காமல்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியது. இதனை தொடர்ந்து, வருகின்ற 2030ம் ஆண்டு குஜராத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன்படி, 20 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் நடைபெறவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில், 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியா நடத்தும் என காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

ALSO READ: என் அனுமதி இல்லாமல்.. நக்வி பிடிவாதம்! இந்திய அணிக்கு கோப்பை தர மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்:


அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுவதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை பாராட்டி, இது இந்தியாவிற்கு பெருமைக்குரிய தருணம். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் இது இந்தியாவிற்கு குஜராத்துக்கும் பெருமைக்குரிய தருணம். பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து,“ 2030ம் ஆண்டு அகமதாபாத் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு காமன்வெல்த் சங்கம் ஒப்புதல் அளித்ததற்கு ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் கடின உழைப்பின் விளைவாக விளையாட்டு உலகில் இந்தியா ஒரு புதிய அடையாளத்தை பெறும்” என்றார்.

ALSO READ: முடிவுக்கு வந்த கைகுலுக்கல் சர்ச்சை! ஹாக்கி போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் ஹை-ஃபைவ்!

காமன்வெல்த் நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “ 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான முன்மொழியப்பட்ட ஹோஸ்ட் நகரமாக இந்தியாவின் அகமதாபாத்தை பரிந்துரைப்பதாக காவன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அகமதாபாத் இப்போது முழு காமன்வெல்த் விளையாட்டு உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்படும். வருகின்ற 2025 நவம்பர் 26ம் தேதி கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு பொது சபையில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.