AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!

Most ODI Sixes in 2025: 2025ம் ஆண்டு பல மறக்கமுடியாத இன்னிங்ஸ்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேநேரத்தில், வான் அளவிற்கு பறந்த சிக்ஸர்களைப் பொறுத்தவரை, 2025ம் ஆண்டு 3 இந்திய பேட்ஸ்மேன்கள் தனித்து நிற்கின்றனர். இன்றைய நவீன கிரிக்கெட்டில் டி20, டி10 என எத்தனையோ கிரிக்கெட் வடிவம் மாறி இருந்தாலும் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தங்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

Year Ender 2025: ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ்ர்கள்.. டாப் 2 பட்டியலில் ரோஹித், கோலி!
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Dec 2025 08:20 AM IST

2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) குறைந்த அளவிலேயே ஒருநாள் போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும் ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli) உள்பட அனுபவமிக்க இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். இதன் காரணமாக, இந்த 2025ம் ஆண்டு பல மறக்கமுடியாத இன்னிங்ஸ்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேநேரத்தில், வான் அளவிற்கு பறந்த சிக்ஸர்களைப் பொறுத்தவரை, 2025ம் ஆண்டு 3 இந்திய பேட்ஸ்மேன்கள் தனித்து நிற்கின்றனர். இன்றைய நவீன கிரிக்கெட்டில் டி20, டி10 என எத்தனையோ கிரிக்கெட் வடிவம் மாறி இருந்தாலும் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தங்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்தவகையில், 2025 ம் ஆண்டில் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!

ரோஹித் சர்மா:

2025ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியல் ரோஹித் சர்மா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 14 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதுமட்டுமின்றி இந்தக் காலகட்டத்தில், ரோஹித் சர்மா 650 ரன்கள் குவித்துள்ளார். 2025ம் ஆண்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 121 ரன்கள் ஆகும். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 100.46 ஆகும். பல போட்டிகளில் ரோஹித் சர்மா தனி ஒரு ஆளாக நின்று இந்திய அணிக்கு வெற்றியையும் தேடி கொடுத்தார்.

விராட் கோலி:

2025ம் ஆண்டில் சிக்ஸர்களைப் பொறுத்தவரை விராட் கோலி ரோஹித் சர்மாவை விட பின் தங்கியிருந்தாலும்,  அவரது நிலைத்தன்மையும் ரன் குவிக்கும் திறனும் சிறப்பாக இருந்தன. 2025ம் ஆண்டில் 13 போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 651 ரன்கள் எடுத்த கோலி, சமீபத்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உள்பட அதிக ரன்களை குவித்தார்.மேலும், இந்த 13 போட்டிகளில் 13 சிக்ஸர்களை அடித்திருந்தார். இது அவரது நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்தமாக 2025ம் ஆண்டில் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 3 சதங்களையும் 4 அரை சதங்களையும் அடித்தார்.

ALSO READ: 2025ல் டெஸ்டில் இந்திய அணி சாதனையா..? சொதப்பலா..? முழு விவரம்!

கே.எல்.ராகுல்:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல், 2025ம் ஆண்டில் 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் மட்டுமே கே.எல். ராகுல் பேட்டிங் செய்தார். ஆனால் இதையும் மீறி, கே.எல்.ராகுல் 13 சிக்ஸர்களை பறக்கவிட்டு, மொத்தமாக 367 ரன்கள் எடுத்தார். அதாவது, கே.எல். ராகுல் கிரீஸில் நேரம் எடுக்கும்போதெல்லாம்,  பெரிய ஷாட்களை ஆடி இந்திய அணிக்கு ரன்களை குவித்து தந்தார். இந்த ஆக்ரோஷமான அணுகுமுறை கே.எல்.ராகுலை 2025ம் ஆண்டின் மிகவும் பயனுள்ள பேட்ஸ்மேன்களில் ஒருவராக காட்டியது.

Follow Us