T20 World Cup 2026: ஒளிபரப்பில் இருந்து விலகுகிறதா ஹாட் ஸ்டார்.. 2026 டி20 உலகக் கோப்பையை எங்கு காணலாம்?
Jio Star Rights ICC: ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இடையேயான ஒளிபரப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை என்றும், இந்தியாவில் ஐசிசியின் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளியாக ஜியோஸ்டார் தொடர்ந்து உள்ளது என்றும் ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், ஸ்டார் நிறுவனம் 2026 டி20 உலகக் கோப்பையை (2026 T20 World Cup) நேரடியாக ஒளிபரப்ப மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. தற்போது இதை ஐசிசி (ICC) முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், ஜியோஸ்டார் 2027 வரை நீடித்த ஒளிபரப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. இதன் காரணமாக, இந்திய ரசிகர்கள் டி20 உலகக் கோப்பை 2026 போட்டிகளை எளிதில் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியாது. இருப்பினும், இந்த தகவல்கள் பொய்யானவை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ: ஐபிஎல் முதல் ஆசியக் கோப்பை வரை.. 2025ல் கிரிக்கெட்டில் நடந்த டாப் 5 சர்ச்சை!




ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இடையேயான ஒளிபரப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை என்றும், இந்தியாவில் ஐசிசியின் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளியாக ஜியோஸ்டார் தொடர்ந்து உள்ளது என்றும் ஐசிசி மற்றும் ஜியோஸ்டார் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதன்மூலம், ஜியோஸ்டார் ஒப்பந்தத்தை முடித்துவிட்டதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் தவறானவை என்பது உறுதியானது.
அறிக்கையில் கூறப்பட்டது என்ன..?
🚨 ICC TOURNAMENT 2026 ON STAR SPORTS & JIO HOTSTAR 🚨
ICC and Jio hotStar have denied reports of a split, confirming that their billion deal remains in full force and effect. no impact on fans or partners.
Good news from Indian Fans ❤️🏏#IndianCricket #Iccevent #ISN pic.twitter.com/oKxUxuhZNB
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) December 12, 2025
ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜியோஸ்டார் தனது ஒப்பந்தத்தின்படி ஒளிபரப்பை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை உட்பட, இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி நிகழ்வுகளை தொடர்ந்து ஒளிபரப்புவதாக ஜியோஸ்டார் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, ஜியோஸ்டார்-ஐசிசி ஒப்பந்தம் 2027 வரை நீடிக்கும்.
ALSO READ: U19 ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. இலவசமாக நேரடி போட்டியை எப்படிப் பார்ப்பது?
நடந்தது என்ன..?
சமீபத்தில், நிதி இழப்புகள் காரணமாக ஜியோஸ்டார் டி20 உலகக் கோப்பை 2026 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த போட்டிகளை ஒளிபரப்ப மறுத்ததாக செய்திகள் வெளியாகின. ஜியோஸ்டார் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026க்கான புதிய ஊடக கூட்டாளரைத் தேடத் தொடங்கியுள்ளதாகவும், 2.4 பில்லியன் டாலர்கள் நிதி கேட்டு நிதி திரட்டியதாகவும் கூட தெரிவிக்கப்பட்டது. அதிக செலவு காரணமாக சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை நிகழ்வை ஒளிபரப்ப மறுத்ததாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும், இந்த அறிக்கைகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது.