T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.. போட்டி எப்போது தெரியுமா?
T20 World Cup 2026 Schedule: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடத்தப்படும் என்று ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
2026 டி20 உலகக் கோப்பையின் (T20 World Cup 2026) அட்டவணை குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. கிடைத்த ஒரு ஊடக அறிக்கையின்படி, 2026 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஐசிசி (ICC) மற்றும் பிசிசிஐ இன்னும் அட்டவணையை உறுதிப்படுத்தவில்லை.ஆனால், அதேநேரத்தில் 2026 உலகக் கோப்பை வருகின்ற 2026 பிப்ரவரி 7 முதல் 2028 மார்ச் 8ம் தேதி வரை நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து உலகக் கோப்பையை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் யாருடன் முதல் போட்டியில் விளையாடும்..?
ரெவ்ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி அமெரிக்காவிற்கு எதிராக இருக்கலாம். இது போட்டியின் தொடக்கப் போட்டியாக இருக்குமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி இரண்டையும் நரேந்திர மோடி மைதானம் நடத்தக்கூடும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், பைனல் இலங்கையில் நடத்தப்படலாம்.




ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி இல்லை.. வெளியான அண்டர் 19 உலகக் கோப்பைக்கான அட்டவணை..!
இந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடத்தப்படும் என்று ஒப்புக்கொண்டன. உலகக் கோப்பை போட்டிகளை பொறுத்தவரை இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம், டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் ஆகியவை உலகக் கோப்பை போட்டிகளை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பையில் கணிக்கப்பட்ட இந்தியாவின் போட்டிகள்:
T20 WC 2026 Groups revealed:
Group A
IND, PAK, NED, NAM, USAGroup B
AUS, SL, ZIM, IRE, OMAGroup C
ENG, WI, BAN, NEP, ITAGroup D
SA, NZ, AFG, UAE, CAN pic.twitter.com/LLDyyxVhgE— Ragav 𝕏 (@ragav_x) November 22, 2025
லீக் ஸ்டேஜ்:
- 2026 பிப்ரவரி 8 – இந்தியா vs அமெரிக்கா, அகமதாபாத்
- 2026 பிப்ரவரி 12 – இந்தியா vs நமீபியா, டெல்லி
- 2026 பிப்ரவரி 15 – இந்தியா vs பாகிஸ்தான், கொழும்பு
- 2026 பிப்ரவரி 18 – இந்தியா vs நெதர்லாந்து, மும்பை
சூப்பர் 8:
(இந்திய அணி தகுதி பெற்றால்)
- 2026 பிப்ரவரி 22 – A1 vs C1, அகமதாபாத்
- 2026 பிப்ரவரி 26 – A1 vs D2, சென்னை
- 2026 மார்ச் 1 – A1 vs B2, கொல்கத்தா
- 2026 மார்ச் 5 – அரையிறுதி 2, மும்பை
- 2026 மார்ச் 8 – இறுதி, அகமதாபாத்
இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் ஒன்றை மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடத்தலாம். பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறினால், நாக் அவுட் போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படாது. உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த கொழும்பு மற்றும் பல்லேகலே மைதானங்களை இலங்கை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தம்புல்லா மற்றும் ஹம்பாந்தோட்டாவும் சாத்தியமான இடங்களாகும்.
பெங்களூருவின் எம். சின்னசாமி மைதானம் கடந்த 2025 ஜூலை மாதத்திற்குப் பிறகு எந்த கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த அனுமதிக்கப்படவில்லை. 2026 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.